← முகப்பு தலையங்கம்

யுவதியின் சடலம் மீது வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் சிற்றூழியர்கள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ள

🕐 03 Mar 2026 📂 தலையங்கம் 14 பார்வைகள்
யுவதியின் சடலம் மீது வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் சிற்றூழியர்கள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ள

யுவதியின் சடலம் மீது வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் சிற்றூழியர்கள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

டிக்கோயா, கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 23 வயது யுவதியின் சடலம் மீது துஷ்பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (03) பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 25ஆம் திகதி, ஹட்டன், எபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் யுவதி உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ளார். இவ்வாறு உயிர்மாய்ப்பு செய்து கொண்ட யுவதியின் சடலம், அன்றைய தினம் மாலை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், யுவதியின் சடலம் மீது வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் சிற்றூழியர்கள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவத்தை கேள்வியுற்ற ஹட்டன் பொதுமக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்றுகூடி “பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம், வைத்தியசாலை நிர்வாகமே உண்மையை வெளிக்கொண்டுவா” போன்ற கோஷங்களை எழுப்பியும் பதாதைகளையும் ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த வைத்திய அதிகாரி, 25ஆம் திகதி சடலம் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதாகவும், அடுத்த நாள் பரிசோதனையின் போது விசித்திரமான மாற்றங்கள் எதுவும் கண்காணிக்கப்படவில்லை எனவும் கூறினார். எனினும், கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், பிரேத அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் குறித்த மூவர் அங்கு சென்றுவந்தது பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

சந்தேகத்திற்குரிய மூவரையும் இன்று மாலை 4 மணிக்குள் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன; அதேவேளை பொதுமக்களின் போராட்டமும் தொடர்கிறது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
04 Jun 2026
தலையங்கம்
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோஸ்டா பிளாங்கா (Costa Blanca) சுற்றுலாத
1 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், இரு நாடுகளும் நடுவானில்
1 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோ நாட்டில் இருந்து சிகாகோ நோக்கிச் சென்று கொண்டிருந்த ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் (Fronti
2 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண்மையைப் பாதுகாக்கவும் தைவான் ராணுவம் தற்போது
2 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
எல் நினோ வானிலை முறை வருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு, உலக
6 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
2
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
3
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்ப
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நில
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோ நாட்டில் இருந்து சிகாகோ நோக்கிச் சென்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
6
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
7
IPL 2026 Retained Stars Who Struggled To Deliver Consistently ft
செய்திகள் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net