← முகப்பு தமிழ்

யாழ். பூம்புகார் மாதிரிக் கிராம நிலத்தடி நீர் ஆய்வுக்கு …

🕐 4 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 188 பார்வைகள்
யாழ். பூம்புகார் மாதிரிக் கிராம நிலத்தடி நீர் ஆய்வுக்கு …

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நீர் பாதுகாப்பிற்கான WASPAR செயற்றிட்டத்தின் கீழ் செயல்படும் இளம் நீர் வாண்மையாளர் வட்டத்தினர், யாழ் அரியாலை–பூம்புகார் மாதிரிக் கிராமத்தின் நிலத்தடி நீர் வளத்தை ஆய்வு செய்வதற்கான கள ஆய்வொன்றை மேற்கொண்டனர்.

இக் களஆய்வின் போது, பூம்புகாரில் உள்ள நீர் வளம் மற்றும் நீர்ப்பயன்பாடு தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடப்பட்டதுடன் நீருடன் தொடர்புடைய சவால்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

மேலும், பூம்புகாரில் உள்ள எழுமாறாக தெரிவு செய்யப்படட சில கிணறுகளில் நீரின் பௌதிக தன்மையானது ஆராயப்பட்டது .

நிலத்தடி நீர் சார்ந்த பிரச்சனைகளை பல வருடங்களாக எதிர் கொள்ளும் மக்கள் பலர் வாழுகின்ற பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆரம்பகட்ட ஆய்வானது அங்குள்ள நீர் மூலங்கள் தொடர்பில் மேலும் விரிவான ஆய்வுகள் செய்வதற்கு அடித்தளமாக அமைகின்றது.

இத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதன் மூலம், கிராம மக்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் செயற்றிட்டக் குழுவினரின் ஒருங்கிணைந்த முயற்சியின் வழியாக பூம்புகார் கிராமத்தில் நிலத்தடி நீரின் பாதுகாப்பான மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த பயன்பாட்டை நீண்டகால நோக்கில் உறுதிசெய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.

பூம்புகார் கிராமம் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் “Clean Sri Lanka” வேலைத்திட்டத்தின் கீழ் மாதிரிக் கிராமமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் ஆரம்ப நிகழ்வில் WASPAR மற்றும் YWP பிரதிநிதிகள் துறைசார் ஆலோசகர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாகவே இவ்வாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
2 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
2 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
4 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
5 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு
7 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net