யாழ்ப்பாண விமான நிலையம் சாதிக்கின்றது!

Homeசெய்திகள்

யாழ்ப்பாண விமான நிலையம் சாதிக்கின்றது!

 தனது மிகச்சிறந்த ஆண்டாக 2025 ஐ பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாணம்   சர்வதேச விமான நிலைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் வட இலங்கையின் முதன்மை

டிட்வா புயலால் நூறிற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக தகவல்
செயற்கை நுண்​ணறிவு உச்சி மாநாடு: இந்தியாவுக்கு ஐ.நா. தலைவர் பாராட்டு
எப்ஸ்டீன் தொடர்பு அம்பலம்… பதவி விலகிய மூத்த பிரெஞ்சு அரசியல்வாதி


 தனது மிகச்சிறந்த ஆண்டாக 2025 ஐ பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாணம்   சர்வதேச விமான நிலைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் வட இலங்கையின் முதன்மையான வான்வழி நுழைவாயிலாக இது தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவற்றில் இந்த விமான நிலையம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2019-2023 காலப்பகுதியின் வருகையாளர்களின் மொத்த எண்ணிக்கையை விட  2025  ஆண்டில்  சுமார் 33,431 வருகையாளர் அதிகமாகும்.தினசரி 7 விமானங்கள் செயல்பாட்டு சாதனை படைத்துள்ளது.இது 2026 ஜனவரியில் எட்டப்பட்டது  இதில் 2 சர்வதேச மற்றும் 5 உள்நாட்டு விமானங்கள் உள்ளடங்கும்.யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் இந்த வளர்ச்சி, 2025 இல் இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் 19.06 பில்லியன் ரூபா இலாபத்திற்குப் பங்களிப்பு செய்துள்ளது.இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடனான தொடர்பை வலுப்படுத்துவதன் மூலம், 2026 ஆம் ஆண்டளவில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அரசாங்கத்தின் இலக்கை அடைய இது நேரடியாக உதவுகிறது.

COMMENTS