← முகப்பு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாளை (12) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது ஊடகப்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 52 பார்வைகள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாளை (12) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது ஊடகப்
நாளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மகிந்த..!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாளை (12) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமேஜ் தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை காலை 9.00 மணிக்கு அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச நாளை நிச்சயமாக ஆணைக்குழுவிற்கு வருவார் என்றும், அவர் ஒருபோதும் பிரச்சினைகளில் இருந்து தப்பியோடுபவர் அல்ல. எனினும், சில சட்ட ரீதியான காரணிகளை நாம் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சில சட்ட ரீதியான விடயங்கள் குறித்து கலந்துரையாட இன்று மாலை சட்டத்தரணிகள் குழுவொன்றுடன் ஆலோசிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, மறைந்த கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், வலுக்கட்டாயமாக அச்சுறுத்தி வாக்குமூலம் பெறப்பட்டதாக கபில சந்திரசேன நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி தாக்கல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாக அழைப்பு விடுக்கப்படுவது பாரதூரமான விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 06 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
2
கொச்சியில் பல நூற்றாண்டுகள் வாழ்ந்த யூதர்கள் எங்கே, எதற்காக சென்ற
செய்திகள் · 55 நிமிடங்கள் முன்னர்
3
பிரிட்டனின் கில்ட்ஃபோர்ட் (Guildford) பகுதியில் உள்ள சர்ரே பல்கலை
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
5
French Open Tennis Finalists: MajA Shvalinska And Alexender Zvere
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
6
Ind vs AFG 1st test 2026- When and Where to Watch Live
செய்திகள் · 3 மணி நேரம் முன்னர்
7
ஆஸ்திரியா மற்றும் இத்தாலியின் எல்லைப் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் (Alp
தலையங்கம் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net