Homeசெய்திகள்

மாட்டு இறைச்சிக்கு மன்னாரில் நிர்ணய விலை

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களிலும்,நிர்ணய விலையில் மாட்டு இறைச்சி விற்பனை செய்ய திங்கட்கிழமை (09) மாவட்ட அரசாங்க

‘ஆக்கிரமிப்பு காஷ்மீர், அக்சாய் சின் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி’ – புதிய வரைபடம் வெளியிட்டது அமெரிக்கா
கனடாவுக்கு செல்லும் மாணவர்கள் விசாவில் அதிரடி மாற்றம்! இனி புதிய நடைமுறைகள்
நாடு முழுவதிலும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் அதிகரிப்பு!
புத்த பெருமானின் புனித சின்னங்களை மீள கொண்டுச் செல்ல வந்த இந்திய தூதுக்குழு
யாழில். இ.போ.ச சாரதியை போதையில் தாக்கிய இளைஞன் கைது


மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களிலும்,நிர்ணய விலையில் மாட்டு இறைச்சி விற்பனை செய்ய திங்கட்கிழமை (09) மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செவ்வாய்க்கிழமை (10) முதல் அமுல்படுத்தப்படும்.
இந்த  கலந்துரையாடலில்  மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) உதவி மாவட்ட செயலாளர், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும்  செயலாளர்கள் ,வருமான வரி பரிசோதகர் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாட்டிறைச்சி குத்தகை கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் கலந்துரையாடி எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை,மாந்தை மேற்கு  பிரதேச சபை,நானாட்டான் பிரதேச சபை மற்றும் முசலி பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபை பிரிவுகளிலும்  செவ்வாய்க்கிழமை (10) முதல் நிர்ணய விலையில் விற்பனை செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாக 1 கிலோ கிராம் தனி இறைச்சி  2,200 ரூபாய்க்கும் , 1 கிலோ கிராம் முள் இறைச்சி 2,000 ரூபாய்க்கும் அதில் (200 கிராம் முள்ளும் 800 கிராம் இறைச்சியும்)  1 கிலோ கிராம் தனி முள்ளு 1,200 ரூபாய்க்கும்,. 1 கிலோ கிராம் ஈரல் 2,500 ரூபாய் க்கும்  விற்பனை செய்வதற்கு மாவட்ட செயலாளர் , தவிசாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களின் முன்னிலையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன் இறைச்சி கடை உரிமையாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்தனர். அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விரைவில் தீர்வுக்கு கொண்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்  தெரிவித்தார்.