← முகப்பு தலையங்கம்

மதுரையை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி மீது கோவையில் நடந்த கொடூர தாக்குதல் மற்றும்

🕐 25 Feb 2026 📂 தலையங்கம் 10 பார்வைகள்
மதுரையை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி மீது கோவையில் நடந்த கொடூர தாக்குதல் மற்றும்

மதுரையை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி மீது கோவையில் நடந்த கொடூர தாக்குதல் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

மதுரையை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி மீது கோவையில் நடந்த கொடூர தாக்குதல் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி இரவு நடந்ததாக கூறப்படுகிறது. கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி, தனது ஆண் நண்பருடன் விமான நிலையம் பின்புறப் பகுதியில் இருந்தபோது, மூன்று இளைஞர்கள் அவர்களைத் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆண் நண்பர் கடுமையாக காயமடைந்த நிலையில், மாணவி கடத்தப்பட்டு கத்தியின் முனையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதலுக்குப் பிறகு மயக்கம் தெளிந்த ஆண் நண்பர் காவல்துறையில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். காயமடைந்த இளைஞருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, துடியலூர் பகுதியில் பதுங்கி இருந்ததாக கூறப்படும் கருப்பசாமி (A1), காளீஸ்வரன் (A2), தவசி (A3) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் சுமார் 150 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். சாட்சியங்களின் பதிவு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இன்று குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அரசு தரப்பு வாதங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதனைத் தொடர்ந்து எதிர் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பிறகு, நீதிபதி தீர்ப்பு வழங்கும் தேதியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கின் தீர்ப்பு சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்காக பலரும் காத்திருக்கின்றனர்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண்மையைப் பாதுகாக்கவும் தைவான் ராணுவம் தற்போது
34 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
எல் நினோ வானிலை முறை வருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு, உலக
4 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேவேளை, டொலர் ஒன்றின் விற்பனை
8 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
உலக சதுரங்க அரங்கில் புதிய சரித்திரம்: கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி 19 ஆண்டு கால சாதனையைச்
9 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில், சம்பவம் தொடர்பான முக்கிய நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் நோக
10 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தற்போது குவைத் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், குறித்த விமான நிலையத்திற்கு வந்த விமானங்களும் வேறு
10 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net