நுவரெலியாவில் பொகவந்தலாவை பொலிஸ் நிலைய விடுதியில் உறங்கிக்கொண்டிருந்த சக பொலிஸ் அதிகாரியை கத்தியால் குத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்காகிய பொலிஸ் அதிகாரியும் சந்தேக நபரான பொலிஸ் அதிகாரியும் சனிக்கிழமை (7) இரவு மது அருந்திக்கொண்டிருந்துள்ள நிலையில் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வாக்குவாதம் காரணமாக ஏற்பட்ட கோபத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். வயிற்றில் பலத்த காயமடைந்த பொலிஸ் அதிகாரி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி ஹட்டன் பதில் நீதவான் எஸ். கருணாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியாவில் பொகவந்தலாவை பொலிஸ் நிலைய விடுதியில் உறங்கிக்கொண்டிருந்த சக பொலிஸ் அதிகாரியை கத்தியால் குத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கத்திக்குத்துக்கு இலக்காகிய பொலிஸ் அதிகாரியும் சந்தேக நபரான பொலிஸ் அதிகாரியும் சனிக்கிழமை (7) இரவு மது அருந்திக்கொண்டிருந்துள்ள நிலையில் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வாக்குவாதம் காரணமாக ஏற்பட்ட கோபத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வயிற்றில் பலத்த காயமடைந்த பொலிஸ் அதிகாரி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி ஹட்டன் பதில் நீதவான் எஸ். கருணாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
