← முகப்பு தமிழ்

பாணந்துறை, குருப்புமுல்ல பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று, 9 மில்லிமீட்டர்

🕐 24 நிமிடங்கள் முன்னர் 📂 தமிழ் 4 பார்வைகள்

பாணந்துறை, குருப்புமுல்ல பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று, 9 மில்லிமீட்டர் ரக 09 தோட்டாக்கள் மற்றும் டி-56 ரக 49 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றினால் வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த துப்பாக்கியும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், அவரிடமிருந்து 04 கிராம் 280 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், போதைப்பொருளை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத் தராசு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாணந்துறை, குருப்புமுல்ல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.
பாணந்துறை தெற்கு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மனிதாபிமானமற்ற
06 Jun 2026
📰
தமிழ்
(எம்.மனோசித்ரா)டொலர் பெறுமதியின் கட்டுப்பாடற்ற உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் நாட்ட
06 Jun 2026
📰
தமிழ்
அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய எடுத்த முடிவு குறித்து தான் கவலையடைவதாக பிரபல தொழிலதிபர் டட்லி
06 Jun 2026
📰
தமிழ்
“இதைப் பதிவு செய்து உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள். 2029 இல் நாமல் வருவார். அதை யாராலும்
06 Jun 2026
📰
தமிழ்
முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) இயக்குநரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சல்லே, தான்
06 Jun 2026
📰
தமிழ்
புதிதாக உருவாக்கப்படும் அரசியல் கூட்டணிகளால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
06 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net