நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் ; பொலிஸ் விசாரணை ஆரம்பம்

Homeசெய்திகள்

நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் ; பொலிஸ் விசாரணை ஆரம்பம்

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா பகுதியில் பாடசாலை ஒன்றில், தரம் 08 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரை ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவி நேற்று வியாழக்கிழமை (05) நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். எனினும், மாணவிக்கு ஏற்பட்ட காயங்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மேலதிக சிகிச்சைக்காக இன்று வெள்ளிக்கிழமை (06) வெள்ளிக்கிழமை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர். தாக்குதலின் விளைவாக மாணவிக்கு அடிகாயங்கள், உட்காயங்கள் ஏற்பட்டதுடன், கடும் வலியினால் தானாக சிறுநீர் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவி இன்று பாடசாலைக்கு செல்லவில்லை என்றும், தொடர்ந்து தலைவலி, தலைச்சுற்று, குமட்டல் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் அதிகரித்து வருவதாகவும் பெற்றோர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்ததாவது, குறித்த ஆசிரியர் வழக்கமாக பாடசாலையில் மாணவ, மாணவிகளுக்கு தொல..

ஒட்டுசுட்டானில் சட்டவிரோத மின்வேலியில் சிக்கிய 5 வயது சிறுவன் உயிரிழப்பு
தமிழர் தாயகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பதற்றம்!
பாராளுமன்ற சேவையாளர்களின் போதைப்பொருள் பாவனை தொடர்பில் விசாரணை

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா பகுதியில் பாடசாலை ஒன்றில், தரம் 08 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரை ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவி நேற்று வியாழக்கிழமை (05) நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். எனினும், மாணவிக்கு ஏற்பட்ட காயங்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மேலதிக சிகிச்சைக்காக இன்று வெள்ளிக்கிழமை (06) வெள்ளிக்கிழமை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.

தாக்குதலின் விளைவாக மாணவிக்கு அடிகாயங்கள், உட்காயங்கள் ஏற்பட்டதுடன், கடும் வலியினால் தானாக சிறுநீர் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவி இன்று பாடசாலைக்கு செல்லவில்லை என்றும், தொடர்ந்து தலைவலி, தலைச்சுற்று, குமட்டல் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் அதிகரித்து வருவதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்ததாவது,

குறித்த ஆசிரியர் வழக்கமாக பாடசாலையில் மாணவ, மாணவிகளுக்கு தொல்லை கொடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி வருவதாக கூறினார். சம்பவ தினத்தன்று, பெற்றோரை குறிப்பிட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கன்னம் மற்றும் செவி பகுதிகளில் கடுமையாக தாக்கியதாகவும், பின்னர் தலையை பிடித்து மேசையில் மோதச் செய்து, முதுகுப் பகுதியில் முழங்கையால் தாக்கியதாகவும் மாணவி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வலி தாங்க முடியாமல் சிறுநீர் கசிவு ஏற்பட்டதாகவும், பாடசாலை முடியும் வரை அதே சீருடை மற்றும் பாதணியுடன் வீடு திரும்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவியிடம் பெற்றோர் விசாரித்த போது, சம்பவ விவரங்களை தெரிவித்ததுடன், ஏற்பட்ட காயங்களையும் காட்டியுள்ளார். இதனையடுத்து, மாணவியை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளனர்.

பெற்றோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த ஆசிரியர் நானுஓயா பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.