← முகப்பு தலையங்கம்

நவகிரகங்களில் சக்திவாய்ந்த கிரகங்களாக கருதப்படும் சூரியன் மற்றும் செவ்வாய் 24 மாதங்களுக்கு பின் ஒரே ராசியில்

🕐 23 Feb 2026 📂 தலையங்கம் 78 பார்வைகள்
நவகிரகங்களில் சக்திவாய்ந்த கிரகங்களாக கருதப்படும் சூரியன் மற்றும் செவ்வாய் 24 மாதங்களுக்கு பின் ஒரே ராசியில்

நவகிரகங்களில் சக்திவாய்ந்த கிரகங்களாக கருதப்படும் சூரியன் மற்றும் செவ்வாய் 24 மாதங்களுக்கு பின் ஒரே ராசியில் இணைகின்றன. பிப்ரவரி 23ஆம் தேதி இந்த இரு கிரகங்களும் கும்ப ராசியில் சேர உள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஜோதிடத்தின் படி, கிரகங்கள் காலக்கட்டப்படி ராசி மாற்றம் செய்யும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் பிரதிபலிக்கும் என்று நம்பப்படுகிறது. நவகிரகங்களில் சக்திவாய்ந்த கிரகங்களாக கருதப்படும் சூரியன் மற்றும் செவ்வாய் 24 மாதங்களுக்கு பின் ஒரே ராசியில் இணைகின்றன. பிப்ரவரி 23ஆம் தேதி இந்த இரு கிரகங்களும் கும்ப ராசியில் சேர உள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த சேர்க்கை தைரியம், தலைமைத்துவம், தன்னம்பிக்கை மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் சக்தி கொண்டதாக கருதப்படுகிறது. குறிப்பாக மேஷம், சிம்மம், தனுசு மற்றும் கும்பம் ராசிக்காரர்களுக்கு இது குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கும் காலமாக பார்க்கப்படுகிறது.

மேஷ ராசிக்காரர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கலாம். பணியில் இருந்த தடைகள் குறைந்து முன்னேற்ற வாய்ப்புகள் உருவாகலாம். நிதி நிலை மேம்பட்டு வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை கிடைக்கும் சூழல் உருவாகும். ஆரோக்கியமும் ஆதரவாக இருக்கும் என கூறப்படுகிறது.

சிம்ம ராசிக்காரர்களுக்கு சொத்து, வாகனம் அல்லது புதிய வீடு தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கலாம். அலுவலகத்தில் மதிப்பு உயரும். மூதாதையர் சொத்து அல்லது நிலுவை பிரச்சினைகள் தீர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். நிதி திட்டங்கள் சாதகமாக அமையும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் துணை நிற்கும் காலமாக இது அமையும். நீண்டநாள் பிரச்சினைகள் குறைந்து தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம். முயற்சிகள் வெற்றியாக மாறும் சூழல் உருவாகும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கை மிகவும் சாதகமானதாக கருதப்படுகிறது. வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அரசு தொடர்பான பணிகளில் முன்னேற்றம் கிடைக்கலாம். சமூக மரியாதை உயரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையலாம்.

இவை அனைத்தும் பாரம்பரிய ஜோதிடக் கருத்துகளின் அடிப்படையில் கூறப்படுகின்றன. ஒருவரின் வாழ்க்கை முழுமையாக கிரக நிலைகளால் மட்டுமே நிர்ணயிக்கப்படாது. தனிப்பட்ட முயற்சி, சூழல், திறன் மற்றும் தீர்மானங்களும் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேலும் செய்திகள்
தலையங்கம்
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண்மையைப் பாதுகாக்கவும் தைவான் ராணுவம் தற்போது
49 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
எல் நினோ வானிலை முறை வருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு, உலக
5 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேவேளை, டொலர் ஒன்றின் விற்பனை
8 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
உலக சதுரங்க அரங்கில் புதிய சரித்திரம்: கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி 19 ஆண்டு கால சாதனையைச்
9 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில், சம்பவம் தொடர்பான முக்கிய நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் நோக
10 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தற்போது குவைத் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், குறித்த விமான நிலையத்திற்கு வந்த விமானங்களும் வேறு
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net