← முகப்பு செய்திகள்

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திங்கட்கிழமை (11) முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 48 பார்வைகள்
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திங்கட்கிழமை (11) முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் முதலமைச்சர் விஜய்

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திங்கட்கிழமை (11) முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று முன்னாள் முதல்வரை விஜய் சந்தித்துள்ளார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற பின், த.வெ.க தலைவர் விஜய், மரியாதை நிமித்தம் மூத்த அரசியல் தலைவர்கள் பலரை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினம் சட்டமன்றத்தில் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட விஜய், கூட்ட நிறைவுக்குப் பின்னரே, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

இந்த சந்திப்பின்போது விஜய், ஸ்டாலின் இருவரும் ஒருவருக்கொருவர் சால்வை அணிவித்து, மரியாதையை வெளிப்படுத்திக்கொண்டனர். அந்த சந்திப்பு வேளையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net