← முகப்பு தமிழ்

சாய்ந்தமருது நகர சபை சட்டரீதியானது! – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 30 பார்வைகள்

சாய்ந்தமருது நகர சபை பிரடணம் சட்ட ரீதியானது!

கல்முனை மாநகர சபைக்கும் சாய்ந்தமருது நகர சபைக்கும் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்ட வேண்டும்

-உயர் நீதிமன்றம் தீர்ப்பு-

கல்முனை சாய்ந்தமருது மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக கருத வேண்டும்-ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்

கல்முனை மாநகர சபை தேர்தல் இடைநிறுத்தப்பட்ட விடயம் தொடர்பிலான சாய்ந்தமருது நகரசபை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று தீர்ப்பின் அடிப்படையில் இவ்வாறு தெரிவித்தார்.

வழக்கில் எதிர் மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்ததாவது

கல்முனை சாய்ந்தமருது மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக கருத வேண்டும்.

இரண்டு மாத காலத்தினுள் எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் எனவும் அதிலும் சாய்ந்தமருது நகர சபைக்கான எல்லை மீள் நிர்ணயமும் மற்றையது கல்முனை பகுதிக்கான எல்லையும் மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.என தெரிவிக்கப்பட்டது.இதில் 3 உள்ளுராட்சி மன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என நானும் வாதாடினேன்.ஆனால் உரிய மாகாண சபை அமைச்சருக்கும் எல்லை மீள் நிர்ணயம் செய்யும் ஆணைக்குழுவும் செய்ய வேண்டிய விடயம் என மன்று சுட்டிக்காட்டியது.2 மாதத்தின் பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினர் எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

அதன் பின்னர் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானியில் அறிவிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டது.இதனை நாங்கள் உண்மையில் வரவேற்கின்றோம்.இது தவிர தற்போது சாய்ந்தமருது நகர சபை மற்றும் கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் தற்போது நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஏனெனில் இரண்டு சபைக்குமான எல்லை நிர்ணயம் செய்யப்படவில்லை.ஆனால் இந்த இரண்டு மாதத்தினுள் எல்லை நிர்ணயத்தை மேற்கொண்டு ஜனாதிபதிக்கு இது தொடர்பில் அறிவித்து அதன் பின்னர் தான் தேர்தல் நடாத்துவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றதை உணர்வதாக குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
4 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
4 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
5 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
8 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு
9 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
2
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
3
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்ப
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நில
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோ நாட்டில் இருந்து சிகாகோ நோக்கிச் சென்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
6
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
7
IPL 2026 Retained Stars Who Struggled To Deliver Consistently ft
செய்திகள் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net