← முகப்பு செய்திகள்

சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் குருநாகல், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவ

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 18 பார்வைகள்
சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் குருநாகல், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவ
பல மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை

சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் குருநாகல், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

அதன்படி, குறித்த பிரதேசங்களில் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும்.

அவ்வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net