ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.அதன்படி, 07 நாட்கள் தடுப்புக் காவலில் அவ
ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.அதன்படி, 07 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் பி.உதயராசா கைது செய்யப்பட்டுள்ளார்.பேலியகொடை பகுதியில் கடந்த மாதம் 29 ஆம் திகதி 04 கிலோ 423 மில்லிகிராம் கொக்கேய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா தொடர்புப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேல்மாகாணத்தின் வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த நிலையில், கொழும்பில் இடம்பெற்றதாக கூறப்படும் பல முக்கிய குற்றச் செயல்களுடன் பி.உதயராசா தொடர்புபட்டுள்ளார் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
COMMENTS