கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

Homeசெய்திகள்

கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மூத்த புதல்வியான சமித்ரி ரம்புக்வெல்லவை பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (06) பிற்பகல் கொழும்பு பிரதம நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்டதாக ‘அத தெரண’ நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் முறையற்ற வகையில் ஈட்டப்பட்ட பணத்தை முறையற்ற வழிகளில் கையாள்வதற்கு (பணச் சுத்திகரிப்பு) உதவியளித்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழேயே அவரது மூத்த புதல்வி கைது செய்யப்பட்டிருந்தார்.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவி பாத்திமா நஷீமா, கோடாரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவு #பொலன்னறுவை
தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் வீரர்களை தேச பற்றார்களாக அறிவிக்க புத்தசாசனஅமைச்சர் இணக்கம்
ஜனாதிபதி அநுர குமார முதன்முறையாக ஹெலிகப்டர் மூலம் கண்டிக்குச் சென்றுள்ளார் என தெரிவித்து, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் அவராகவே கைதட்டி மகிழ்ந்தார்.

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மூத்த புதல்வியான சமித்ரி ரம்புக்வெல்லவை பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (06) பிற்பகல் கொழும்பு பிரதம நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்டதாக ‘அத தெரண’ நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் முறையற்ற வகையில் ஈட்டப்பட்ட பணத்தை முறையற்ற வழிகளில் கையாள்வதற்கு (பணச் சுத்திகரிப்பு) உதவியளித்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழேயே அவரது மூத்த புதல்வி கைது செய்யப்பட்டிருந்தார்.