குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளின் நிலப்பகுதிகள், வான்வெளி மற்றும் கடல்வழி பகுதிகள் மீது டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இது தீங்கு விளைவிக்க கூடியது என்று சவுதி அரேபியா கண்டனம் வெளியிட்டு உள்ளது. இதுபற்றி அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் கத்தார் நாடுகள் மீது நடந்த டிரோன் தாக்குதலுக்கு சவுதி அரேபிய அரசு கடும் கண்டனம் தெரிவிக்கிறது. வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எங்களுடைய அரசு ஆதரவளிக்கிறது என தெரிவித்து உள்ளது. குவைத் மீது நடந்த டிரோன் தாக்குதலுக்கு, கத்தார் அரசும் கண்டனம் தெரிவித்து உள்ளது. குவைத்தின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்ட விதிமீறலாகும் என குறிப்பிட்டு உள்ளது. குவைத் நாட்டின் வான்வெளி மீது நேற்று டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட கண்டன செய்தியில், குவைத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன், இந்த பயங்கரவாத தாக்குதல்கள் குவைத்தின் இறையாண்மையை மீறும் செயலாகும் என்றும் தெரிவித்தது. இதனை ஈரான் நடத்தியிருக்க கூடும் என அந்நாடுகள் தெரிவித்து உள்ளன என டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளின் நிலப்பகுதிகள், வான்வெளி மற்றும் கடல்வழி பகுதிகள்
குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மீது டிரோன் தாக்குதல் – சவுதி அரேபியா கண்டனம்