← முகப்பு தமிழ்

குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கு ஜூன் 17 இல் விசாரணை

🕐 4 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 224 பார்வைகள்

இந்த வழக்கு இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ரஷாந்த கொடவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான், வழக்கு விசாரணைக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் இரண்டு வாரங்களுக்குள் பிரதிவாதி தரப்பிற்கு வழங்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, முதற்கட்ட வழக்கு விசாரணையை நிறைவு செய்த நீதவான், ஜூன் மாதம் 17 ஆம் திகதி வழக்கு விசாரணையை ஆரம்பிப்பதாக உத்தரவிட்டார்.

அன்றைய தினம் வழக்கின் இரண்டு சாட்சியாளர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து அவர்களுக்கு அழைப்பாணை அனுப்புமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

2016 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் மற்றும் இறக்குமதி பிரிவின் மேலாளராக பணியாற்றிய போது, ஹுனுபிட்டிய களஞ்சிய வளாகத்தில் தார் இடுவதற்கான கொள்முதல் நடவடிக்கையின் போது தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சாதகமாகச் செயற்பட்டு, அரசாங்கத்திற்கு 8,859,708 ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதன் மூலம் "ஊழல்" எனும் குற்றத்தைச் செய்ததாக முன்னாள் அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
2 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
2 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
4 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
5 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு
7 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net