குடும்பிமலைப் பகுதியில் 3 கவச எதிர்ப்பு ஆயுதங்கள் மீட்பு

Homeசெய்திகள்

குடும்பிமலைப் பகுதியில் 3 கவச எதிர்ப்பு ஆயுதங்கள் மீட்பு

மட்டக்களப்பு குடும்பிமலை பிரதேசத்தில் விடுதலைப் புலிகளால் பாதுகாப்பாக நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட 84 மில்லி மீற்றர் விட்டம் கொண்ட லோஞ்சர் ரக வகையைச் சேர்ந்து கவச எதிர்ப்பு ஆயுதங்களை (Carl Gustaf 3) நேற்று வெள்ளிக்கிழமை (06) விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர். பொலன்னறுவை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குடும்பிமலை பகுதியில் அரங்கலாவ இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை வாழைச்சேனை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில். மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் – 20 கிலோ மீட்டர் துரத்தி சென்று கைது செய்த பொலிஸார்
ஜேவிபி:மதிப்பதேயில்லை!
யப்பானில் முதல் போக்கிமொன் தீம் பூங்கா திறந்து வைப்பு

மட்டக்களப்பு குடும்பிமலை பிரதேசத்தில் விடுதலைப் புலிகளால் பாதுகாப்பாக நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட 84 மில்லி மீற்றர் விட்டம் கொண்ட லோஞ்சர் ரக வகையைச் சேர்ந்து கவச எதிர்ப்பு ஆயுதங்களை (Carl Gustaf 3) நேற்று வெள்ளிக்கிழமை (06) விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

பொலன்னறுவை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குடும்பிமலை பகுதியில் அரங்கலாவ இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை வாழைச்சேனை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.