ஐக்கிய மக்கள் சக்திக்கு 6 வயது! கதிர்காமத்தில் விசேட பூஜை வழிபாடுகள்

Homeசெய்திகள்Design

ஐக்கிய மக்கள் சக்திக்கு 6 வயது! கதிர்காமத்தில் விசேட பூஜை வழிபாடுகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சி ஸ்தாபிக்கப்பட்டு ஆறு வருடங்கள் பூர்த்தியடைவதனை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கும் கட்சிக்கும் ஆசி வேண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க புனித கதிர்காமம் கிரிவெஹெர விகாரை வளாகத்தில் பெப்ரவரி 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் பல்வேறு விசேட சமய நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வுகளில், மஹாசென் தேவாலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து அஷ்டபலபோதியவில் விசேட சமய அனுஷ்டானங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் புனித அரச மரத்திற்கு 'அட்டபிரிகரை' வழங்கி வைக்கப்பட்டது. சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து, கிரிவெஹெர தூபிக்கான விசேட வஸ்திர (கப்ருக்க ) பூஜை இடம்பெற்றது. பின்னர், சர்வராத்திரியப் (முழு இரவு) பிரித் பாராயணம் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து மகா சங்கத்தினருக்குப் பிரிகர மற்றும் காலை நேரத் தானம் வழங்கி வைக்கப்பட்டு ஆசிகள் பெறப்பட்டன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டார். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்து..

வீட்டு தோட்டத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு !
பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான வெளியிடப்பட்ட வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளது – வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் !
அடுத்த மூன்றாண்டுகளுக்குள் தரம் 9 வரை கல்விச் சீர்திருத்தம் – நளிந்த ஜயதிஸ்ஸ !
தற்போதைய அரசாங்கத்தை இந்நாட்டு மக்கள் மிக விரைவில் வெறுத்து ஒதுக்குவார்கள் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரியால் நிஷாந்த
இ.போ.ச பஸ் சாரதி மீது தாக்குதல் நடத்திய தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் கைது !

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சி ஸ்தாபிக்கப்பட்டு ஆறு வருடங்கள் பூர்த்தியடைவதனை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கும் கட்சிக்கும் ஆசி வேண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க புனித கதிர்காமம் கிரிவெஹெர விகாரை வளாகத்தில் பெப்ரவரி 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் பல்வேறு விசேட சமய நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வுகளில், மஹாசென் தேவாலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து அஷ்டபலபோதியவில் விசேட சமய அனுஷ்டானங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் புனித அரச மரத்திற்கு ‘அட்டபிரிகரை’ வழங்கி வைக்கப்பட்டது.
சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து, கிரிவெஹெர தூபிக்கான விசேட வஸ்திர (கப்ருக்க ) பூஜை இடம்பெற்றது. பின்னர், சர்வராத்திரியப் (முழு இரவு) பிரித் பாராயணம் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து மகா சங்கத்தினருக்குப் பிரிகர மற்றும் காலை நேரத் தானம் வழங்கி வைக்கப்பட்டு ஆசிகள் பெறப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டார். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், கட்சியின் தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள், இணைப்புக் குழுக்களின் தலைவர்கள், கட்சிச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பெருமளவிலான பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி, நாட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முற்போக்கான சமூக மற்றும் அரசியல் ரீதியிலான சேவைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.