Homeசெய்திகள்

எம்பிக்களே விடுதலைக்கு தடையாம்!

திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலையை வைத்த விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  பௌத்த பிக்குகள் திருகோணமலையை சேர்ந்த இரு நாடாளுமன்ற உற

எப்ஸ்டீன் தொடர்பு அம்பலம்… பதவி விலகிய மூத்த பிரெஞ்சு அரசியல்வாதி
யாழில் இருந்து தப்பி சென்ற வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் 09 வருடங்களின் பின் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்
செம்மணி புதைகுழிக்குள் இருந்து வெளியேற்றப்படும் வெள்ளம்
தமிழ் மக்களுக்காக மாகாண சபை தேர்தலை நடத்துமாறு கோரிக்கை
“போட்டித் தேர்வை நடத்தக்கூட துப்பில்லாத திமுக அரசு” – அன்புமணி ஆவேசம்!


திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலையை வைத்த விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  பௌத்த பிக்குகள் திருகோணமலையை சேர்ந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களே தமது தடுத்து வைப்பிற்கு காரணமானவர்களென குற்றஞ்சுமத்தியுள்ளனர்.இதனிடையே பௌத்த பிக்குகள் நால்வர் உள்ளிட்ட 10 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில்  இன்று திங்கட்கிழமை (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் பிணை மறுக்கப்பட்ட நிலையில், பிரதிவாதிகள் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிணை மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்கள், கடந்த 3ஆம் திகதியன்று நீதிமன்றினால் நிராக்கப்பட்டது. அதனை அடுத்தே, பிணைமனுக்கோரிக்கை திருகோணமலை மேல் நீதிமன்றத்தில், இன்று திங்கட்கிழமை (09) தாக்கல் செய்யப்பட்டது. எனினும், 10பேரினதும் பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விளக்கமறியல் 3வது தடவையாக நீடிக்கப்படடுள்ளது.