← முகப்பு தலையங்கம்

உள்ளூர் நேரப்படி அதிகாலை 01:30 மணியளவில், சுமார் 20 வயது நபர் மார்-ஏ-லாகோவின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள்

🕐 22 Feb 2026 📂 தலையங்கம் 78 பார்வைகள்
உள்ளூர் நேரப்படி அதிகாலை 01:30 மணியளவில், சுமார் 20 வயது நபர் மார்-ஏ-லாகோவின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள்

உள்ளூர் நேரப்படி அதிகாலை 01:30 மணியளவில், சுமார் 20 வயது நபர் மார்-ஏ-லாகோவின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புளோரிடா – பாம் பீச்சில் உள்ள மார்-ஏ-லாகோ (Mar-a-Lago) இல்லத்தின் பாதுகாப்பு வளையத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவரை இரகசிய சேவை அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 01:30 மணியளவில், சுமார் 20 வயது நபர் மார்-ஏ-லாகோவின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்தார். அவர் ஒரு துப்பாக்கி மற்றும் பெட்ரோல் கேன் வைத்திருந்ததாகப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் அவரை ஆயுதங்களைக் கீழே போடுமாறு கட்டளையிட்டனர். அந்த நபர், பெட்ரோல் கேனை கீழே போட்டுவிட்டு, தனது துப்பாக்கியைச் சுடும் நிலையில் உயர்த்தியபோது, அதிகாரிகள் அவரை நோக்கிச் சுட்டு "அச்சுறுத்தலை முறியடித்தனர்".

இந்தச் சம்பவத்தின் போது டிரம்ப் புளோரிடாவில் இல்லை; அவர் வாஷிங்டன் டிசியில் இருந்தார்.

பாதுகாப்புப் பணியில் இருந்த ரகசிய சேவை அதிகாரிகள் மற்றும் ஷெரிப் அலுவலக அதிகாரிகளுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து எஃப்.பி.ஐ (FBI) தீவிர விசாரணை நடத்தி ஆதாரங்களைச் சேகரித்து வருகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் அடையாளம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

பாதுகாப்பு அதிகாரிகள் உடலில் அணிந்திருந்த கேமராக்கள் மூலம் இந்தச் சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அச்சுறுத்தல்கள் ஏற்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் ஜூலை 2024 இல் பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, அவர் காதில் காயமடைந்தார்.

அதேபோல், செப்டம்பர் 2024 இல் புளோரிடாவில் உள்ள அவரது கோல்ஃப் கிளப்பில் மற்றொரு துப்பாக்கி ஏந்திய நபர் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண்மையைப் பாதுகாக்கவும் தைவான் ராணுவம் தற்போது
50 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
எல் நினோ வானிலை முறை வருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு, உலக
5 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேவேளை, டொலர் ஒன்றின் விற்பனை
8 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
உலக சதுரங்க அரங்கில் புதிய சரித்திரம்: கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி 19 ஆண்டு கால சாதனையைச்
9 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில், சம்பவம் தொடர்பான முக்கிய நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் நோக
10 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தற்போது குவைத் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், குறித்த விமான நிலையத்திற்கு வந்த விமானங்களும் வேறு
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net