← முகப்பு தமிழ்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளால் தற்போதைய அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே மாகாண சபைத் தே

🕐 06 Jun 2026 📂 தமிழ் 2 பார்வைகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளால் தற்போதைய அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே மாகாண சபைத் தேர்தலை அவர்கள் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

‘மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் கோழைத்தனமான அநுரவின் வெறியாட்டத்தை தோற்கடிப்போம்’ என்ற கருப்பொருளில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு:

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஆட்சிக்கு வந்த மிகக் குறுகிய காலத்திற்குள் தற்போதைய அரசாங்கம் சுமார் 23 இலட்சம் வாக்குகளை இழந்துள்ளது. தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் மேலும் பல இலட்சம் வாக்குகளை இழக்க நேரிடும் என்ற அச்சத்தினால், மக்கள் மத்தியில் செல்ல அரசாங்கம் தயக்கம் காட்டுகின்றது.

நாட்டு மக்கள் கடந்த கால நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். எந்தவொரு தரப்பிற்கும் பாராமன்றத்தில் அல்லது ஆட்சியில் அபரிமிதமான (மூன்றில் இரண்டு) அதிகாரத்தை வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்கினால் அதிகார மமதையால் நாட்டை சீரழிக்கும் தவறான அரச ஆளுகை முறையே உருவாகும்.

ஒரே மாற்றாகக் காணப்படும் ஐக்கிய மக்கள் சக்திக்குக் கூட சாதாரண பெரும்பான்மையே போதுமானது; அறுதிப் பெரும்பான்மையோ அல்லது அபரிமிதமான அதிகாரமோ எமக்கும் தேவையில்லை.

மக்களின் துயரங்களை விற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், இன்று அவற்றை மறந்து சுகபோகங்களை அனுபவித்து வருகின்றது. உலக சந்தையில் நிலவரங்கள் சாதகமாக இருந்தும், மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்கவோ அல்லது எரிபொருளுக்கான வரிகளை நீக்கி மக்களுக்கு நிவாரணம் வழங்கவோ இந்த அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியால் "தேசிய நடவடிக்கைக் குழு" ஒன்று ஸ்தாபிக்கப்படும். இதில் பதவிகளுக்கு முன்னுரிமை அளிக்காமல், மக்களின் துயரங்களைத் தீர்க்கப் போராடும் அனைவரும் உள்வாங்கப்படுவர்.

மாகாண சபைகள் மூலம் சர்வதேச முதலீடுகளைக் கூட ஈர்த்து சிறந்த சேவையாற்ற முடியும். நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து, அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய 13 ஆவது திருத்தச் சட்டம் அவசியமானது. சர்வதேசத்திற்குச் சென்றால் '13 பிளஸ்' என்றும், உள்நாட்டில் சில பகுதிகளில் '13 மைனஸ்' என்றும் இரட்டை வேடம் போடும் அரசியல் எமக்குக் கிடையாது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை அதில் உள்ளவாறே நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய எடுத்த முடிவு குறித்து தான் கவலையடைவதாக பிரபல தொழிலதிபர் டட்லி
06 Jun 2026
📰
தமிழ்
“இதைப் பதிவு செய்து உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள். 2029 இல் நாமல் வருவார். அதை யாராலும்
06 Jun 2026
📰
தமிழ்
முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) இயக்குநரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சல்லே, தான்
06 Jun 2026
📰
தமிழ்
புதிதாக உருவாக்கப்படும் அரசியல் கூட்டணிகளால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
06 Jun 2026
📰
தமிழ்
மீகொடை சந்தியில் தன்சல் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில்
06 Jun 2026
📰
தமிழ்
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு, மயிலிட்டிப் பகுதியில் இராணுவத்தினர் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து பங்களாக்களை அ
06 Jun 2026
முக்கிய செய்திகள்
1
அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய எடுத்த முடிவு குறித்து தான் கவல
தமிழ் · 06 Jun 2026
2
“இதைப் பதிவு செய்து உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள். 2029 இல் நாமல
தமிழ் · 06 Jun 2026
3
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள
4
Weekly Horoscope: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதி முதல் 2026 ஜூன் 13
5
அதிமுக நிர்வாகிகள் பலர் தவெகவில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள்.
6
முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) இயக்குநரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜ
தமிழ் · 06 Jun 2026
7
புதிதாக உருவாக்கப்படும் அரசியல் கூட்டணிகளால் எந்த மாற்றமும் ஏற்பட
தமிழ் · 06 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net