Homeசெய்திகள்

உலகுக்கான இந்தியாவின் கொடையே தமிழ் மொழி: மோடி புகழாரம்!

“ உலகுக்கான இந்தியாவின் கொடை தமிழ் மொழியாகும். தமிழ் இலக்கியம் நித்தியமானது. தமிழ் பண்பாடு உலகளாவியது .” இவ்வாறு இந்திய பிரதமர் நநேர்திர மோடி Narendra Modi தெரிவித்தார். மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தலைநகர் கோலாலம்பூரில் பிரதமர் மோடியை விமான நிலையத்துக்கே வந்து பிரதமர் அன்வர் இப்ராஹிம் Anwar Ibrahim வரவேற்றார். இந்திய வம்சாவளியினர் பெருமளவில் பங்கேற்ற சமூக நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். ‘‘இந்தியாவுக்கும் மலேசியாவுக்குமான தொடர்பு இதயப்பூர்வமானது. உலகில் இந்திய வம்சாவளியினர் அதிகம் இருக்கும் இரண்டாவது நாடு மலேசியா. இந்தியாவையும் மலேசியாவையும் இணைக்கும் விஷயங்கள் பல உள்ளன. இங்குள்ள நீங்கள் இரு நாடுகளையும் இணைக்கும் உயிருள்ள பாலமாக இருக்கிறீர்கள். நம் மொழிகளில் நாம் பகிரும் பல வார்த்தைகளில் நாம் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்கிறோம். தமிழ் மொழி, உலகுக்கான இந்தியாவின் கொடை. தமிழ் இலக்கியம் நித்தியமானது, தமிழ் நண்பாடு உலகளாவியது. தமிழர்கள் தங்கள் திறமைகளால் மனித குலத்துக்கு சேவை செய்கின்றனர். நாம் ..

4 நாட்களுக்குள் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!
மரக்கறி விலைப்பட்டியல் (07.02.2026)
14 பேரில் சடலங்களைக் கடந்தா தனது வாழ்வை தலைவர் கட்டியமைத்தார்?

“ உலகுக்கான இந்தியாவின் கொடை தமிழ் மொழியாகும். தமிழ் இலக்கியம் நித்தியமானது. தமிழ் பண்பாடு உலகளாவியது .”
இவ்வாறு இந்திய பிரதமர் நநேர்திர மோடி Narendra Modi தெரிவித்தார்.

மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

தலைநகர் கோலாலம்பூரில் பிரதமர் மோடியை விமான நிலையத்துக்கே வந்து பிரதமர் அன்வர் இப்ராஹிம் Anwar Ibrahim வரவேற்றார்.

இந்திய வம்சாவளியினர் பெருமளவில் பங்கேற்ற சமூக நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

‘‘இந்தியாவுக்கும் மலேசியாவுக்குமான தொடர்பு இதயப்பூர்வமானது.
உலகில் இந்திய வம்சாவளியினர் அதிகம் இருக்கும் இரண்டாவது நாடு மலேசியா.

இந்தியாவையும் மலேசியாவையும் இணைக்கும் விஷயங்கள் பல உள்ளன. இங்குள்ள நீங்கள் இரு நாடுகளையும் இணைக்கும் உயிருள்ள பாலமாக இருக்கிறீர்கள்.

நம் மொழிகளில் நாம் பகிரும் பல வார்த்தைகளில் நாம் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்கிறோம்.

தமிழ் மொழி, உலகுக்கான இந்தியாவின் கொடை. தமிழ் இலக்கியம் நித்தியமானது, தமிழ் நண்பாடு உலகளாவியது.

தமிழர்கள் தங்கள் திறமைகளால் மனித குலத்துக்கு சேவை செய்கின்றனர். நாம் ஒருவருக்கு ஒருவர் வெற்றிகளைக் கொண்டாடுகிறோம்.

சந்திராயன்-2 திட்டத்தின் வெற்றிக்கு பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தபோது நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். இந்தியாவின் வெற்றி மலேசியாவின் வெற்றி. இது ஆசியாவின் வெற்றி. “ என்றார் மோடி.

The post உலகுக்கான இந்தியாவின் கொடையே தமிழ் மொழி: மோடி புகழாரம்! appeared first on Kuruvi.