← முகப்பு தலையங்கம்

உலகளவில் அதிகரித்து வரும் போர் பதற்ற சூழ்நிலைகளின் பின்னணியில், பிரான்ஸ் தனது அணு ஆயுத களஞ்சியத்தை

🕐 04 Mar 2026 📂 தலையங்கம் 60 பார்வைகள்
உலகளவில் அதிகரித்து வரும் போர் பதற்ற சூழ்நிலைகளின் பின்னணியில், பிரான்ஸ் தனது அணு ஆயுத களஞ்சியத்தை

உலகளவில் அதிகரித்து வரும் போர் பதற்ற சூழ்நிலைகளின் பின்னணியில், பிரான்ஸ் தனது அணு ஆயுத களஞ்சியத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டார்.

உலகளவில் அதிகரித்து வரும் போர் பதற்ற சூழ்நிலைகளின் பின்னணியில், பிரான்ஸ் தனது அணு ஆயுத களஞ்சியத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டார். அட்லாண்டிக் கடற்கரையில் அமைந்துள்ள ‘இல் லாங்கு’ கடற்படை தளத்தில் ராணுவ தளபதிகள் முன்னிலையில் பேசிய அவர், “நாம் சுதந்திரமாக நிலைக்க விரும்பினால், வலிமையானவர்களாகவும், பிறர் அஞ்சும் சக்தியாகவும் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

1992ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக பிரான்ஸ் தனது அணு ஆயுத எண்ணிக்கையை உயர்த்தும் தீர்மானத்தை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது சுமார் 290 முதல் 300 வரை அணு ஆயுதங்கள் வைத்துள்ள பிரான்ஸ், புதிய திட்டத்தின் கீழ் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க உள்ளது. இனி பாதுகாப்பு காரணங்களால் அணு ஆயுதங்களின் சரியான எண்ணிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாது என்றும் அதிபர் தெரிவித்தார்.

மேலும், ஐரோப்பிய பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், ஜெர்மனி மற்றும் போலந்து போன்ற நட்பு நாடுகளுக்கு அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட போர் விமானங்களை வழங்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த அறிவிப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்ததுடன், பல்வேறு தரப்புகளில் அதிர்ச்சியையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
04 Jun 2026
தலையங்கம்
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோஸ்டா பிளாங்கா (Costa Blanca) சுற்றுலாத
1 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், இரு நாடுகளும் நடுவானில்
1 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோ நாட்டில் இருந்து சிகாகோ நோக்கிச் சென்று கொண்டிருந்த ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் (Fronti
2 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண்மையைப் பாதுகாக்கவும் தைவான் ராணுவம் தற்போது
2 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
எல் நினோ வானிலை முறை வருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு, உலக
6 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
2
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
3
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்ப
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நில
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோ நாட்டில் இருந்து சிகாகோ நோக்கிச் சென்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
6
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
7
IPL 2026 Retained Stars Who Struggled To Deliver Consistently ft
செய்திகள் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net