உணவுப் பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை – இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு

Homeசெய்திகள்Design

உணவுப் பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை – இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு

நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார சூழலில் எரிவாயு விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று சனிக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னைய காலங்களில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது தற்போதைய ஜனாதிபதி ஒரே எரிவாயுவுக்கு நிறத்தை மாற்றி ஏன் இரண்டு விலைகள்? என்று கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் இன்று அவரே ஆட்சியில் இருக்கும் போது நீல நிற எரிவாயு ஒரு விலையிலும் மஞ்சள் நிற எரிவாயு அதிக விலையிலும் விற்பனை செய்யப்படுவது ஏன்? என்று நாம் கேட்க விரும்புகிறோம். எரிவாயு மாத்திரமன்றி சந்தையில் ..

மாணவர்கள் , இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது !
மாகாண சபை தேர்தல் இவ்வருடத்தில் இடம்பெறாது ; பூர்ண விளக்கத்துடன் ஜெனீவா செல்ல தயாராகும் அரசாங்கம்
கைப்பேசியால் தீக்கிரையான வீடு
ஐக்கிய மக்கள் சக்திக்கு 6 வயது! கதிர்காமத்தில் விசேட பூஜை வழிபாடுகள்
லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலய நிதியுதவியில் காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைக் கட்டடம்

நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார சூழலில் எரிவாயு விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னைய காலங்களில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது தற்போதைய ஜனாதிபதி ஒரே எரிவாயுவுக்கு நிறத்தை மாற்றி ஏன் இரண்டு விலைகள்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால் இன்று அவரே ஆட்சியில் இருக்கும் போது நீல நிற எரிவாயு ஒரு விலையிலும் மஞ்சள் நிற எரிவாயு அதிக விலையிலும் விற்பனை செய்யப்படுவது ஏன்? என்று நாம் கேட்க விரும்புகிறோம். எரிவாயு மாத்திரமன்றி சந்தையில் கீரி சம்பாவுக்கு 260 ரூபாகட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் அது 340 ரூபா வரை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகின்றது.
கோழி இறைச்சி தேங்காய் எண்ணெய் மற்றும் மீன் வகைகளின் விலைகளும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி உயர்ந்துள்ளன. வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் தூக்கத்தில் இருக்கிறாரா அல்லது இந்த திருட்டுகளுக்கு உடந்தையாக இருக்கிறாரா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.
சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் பெரும் நட்டத்தையே சந்தித்து வருகின்றனர். ஒருபுறம் எரிவாயு விலையேற்றம் மறுபுறம் மூலப்பொருட்களின் அதீத விலை உயர்வு என இரட்டைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளோம். இந்த நிலை தொடருமானால் நுகர்வோர் மீது சுமையை ஏற்ற விரும்பாத போதிலும் எமது தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்காக உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.
தற்போதைய அமைச்சரவை மற்றும் அதிகாரிகள் சந்தையில் நிலவும் இந்த விலை மோசடிகளைத் தடுக்கத் தவறிவிட்டனர். மக்களையும் வர்த்தகர்களையும் பாதுகாக்க முடியாத ஒரு அரசாங்கம் எதற்கு? ஜனாதிபதி அன்று மேடைகளில் பேசிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார்.
முறையான விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறை ஒன்றை அமுல்படுத்தத் தவறினால் எமது சங்கத்தினர் இணைந்து கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிடும் என்றார்.