• இந்த ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும், 3 வேலை வாய்ப்புகள் வரை விண்ணப்பிப்பதற்கான வசதி. இஸ்ரேல் வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்காக இதுவரை வழங்கப்ப
இஸ்ரேல் வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்காக இதுவரை வழங்கப்பட்டிருந்த அதிகபட்ச வாய்ப்புகள் 2 என்பதற்குப் பதிலாக, இந்த ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் 3 வாய்ப்புகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி வேலை தேடுபவர்கள் 3 வாய்ப்புகள் வரை விண்ணப்பிக்க முடியும் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (06) இஸ்ரேலில் நிலவும் சில வேலைவாய்ப்புகளுக்காக இணையதளம் ஊடாக விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புகள் திறந்து விடப்படும் என்றும் பணியகம் அறிவித்துள்ளது.
பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.slbfe.lk ஊடாக இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் விண்ணப்பதாரர்கள் 3 வாய்ப்புகள் வரை விண்ணப்பிக்கும் வசதியைப் பெறுகின்றனர். அதன்படி, கட்டுமானத் துறையில் கம்பி வளைத்தல் (Bar bending), சாந்து பூசுதல் (Plastering), ஷட்டரிங் தச்சு வேலைகள் (Shuttering Carpentry), செராமிக் டைல் வேலைகள் (Ceramic Tiling) மற்றும் புனரமைப்புத் துறையில் பொது வேலைகள், சாந்து பூசுதல் மற்றும் செராமிக் டைல் வேலைகளுக்காக விண்ணப்பிக்க இணையதளம் திறக்கப்படும்.