Homeசெய்திகள்

அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை!

 வல்வெட்டித்துறையில் உள்ள தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டினை அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக வல்வெட்டித்துறை நகரசபை சபை த

இ – 20 உலகக் கிண்ண விலகலில் பங்களாதேஷுக்கு தண்டமில்லை: சர்வதேச கிரிக்கெட் சபை
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
இலங்கையில் சிம் கார்டு பதிவு விதிமுறைகள் திருத்தப்பட உள்ளன
உதவித் தொகை உயர்வு கோரி மறியலில் ஈடுபட முயன்ற மாற்றுத் திறனாளிகள் கைது
கிவுல் ஓயா திட்டம் குறித்த சர்ச்சை தொடர்கிறது…


 வல்வெட்டித்துறையில் உள்ள தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டினை அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக வல்வெட்டித்துறை நகரசபை சபை தலைவர எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டினை பார்வையிட ஆயிரக்கணக்கில் படையெடுத்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் சிங்கள மக்கள்.அவர்கள் அந்த மண்ணை எடுத்து சென்றதால் ஏற்பட்ட கோபத்தில், அந்த வீட்டை இலங்கை இராணுவம் முற்றாக இடித்து அகற்றி வெறும் மணல் தரையாக மாற்றினர்.இந்நிலையில் தமிழ் மக்களின் கருத்துக்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் உலகத்தலைவர்கள் பலரின் வீடுகள் நினைவுச்சின்னங்களாக மாற்றப்பட்டதை போல தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டையும் அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். எனினும் அதில் கட்டப்படுவதாக கூறப்படும் நூலகத்துக்கு எந்த தடையும் இல்லை.அதில் தலைவர் பிரபாகரனின் வீட்டின் மாதிரியையும், அவரின் பெற்றோர்களின் திருவுருவச்சிலைகளையும் நிறுவவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளோம்” எனவும் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.