Homeசெய்திகள்

அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் இணைக்கும் தேசிய செயற்பாடு ஆரம்பம்

நாட்டின் முன்னணி அரச நிறுவனங்களைத் தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் இணைப்பதற்கான விசேட கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் சுதந்திரத்தின் கம்பீரத்தன்மை இல்லாமல் போயுள்ளது.
மலேசிய இன்ஸ்டா பிரபலத்துக்கு ரூ.9.2 லட்சம் அபராதம் – நடந்தது என்ன?
அரசாங்கத்துக்கு ஆறு மாதம் காலவகாசம் வழங்குகிறோம்! முடிந்தால் தேர்தலை நடத்துங்கள்!
யாழ்ப்பாண விமான நிலையம் சாதிக்கின்றது!
எம்பிக்களே விடுதலைக்கு தடையாம்!


நாட்டின் முன்னணி அரச நிறுவனங்களைத் தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் இணைப்பதற்கான விசேட கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
நவீன உலகில் சைபர் பாதுகாப்பு என்பது வெறும் தொழில்நுட்பம் சார்ந்த விடயம் மட்டுமல்ல, அது தேசிய பாதுகாப்போடு தொடர்புடையது என இங்கு வலியுறுத்தப்பட்டது.
இலங்கை CERT நிறுவனம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைத்து முக்கிய அரச நிறுவனங்களையும் இந்த மையத்துடன் இணைக்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இதன் மூலம் அரசின் முக்கிய தகவல்களைப் பாதுகாப்பாகப் பரிமாறிக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.
முதற்கட்டமாக முன்னுரிமை அளிக்கப்படும் நிறுவனங்களைத் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் ஊடாகக் கணக்காய்வு செய்யவும் பரிந்துரைக்கப்பட்ட ள்ளது.
அத்துடன், அனைத்து அரச அதிகாரிகளுக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் முறையான பயிற்சித் திட்டங்களைச் செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.