அரசுக்கு உதவ உலக வங்கியின் பிரதிநிதிகள் இலங்கை வருகை

Homeசெய்திகள்

அரசுக்கு உதவ உலக வங்கியின் பிரதிநிதிகள் இலங்கை வருகை

உலக வங்கி பிரதிநிதிகள் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளனர். 2022-23 பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்ட நெடுஞ்சாலைகள், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு தொ

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் டிஜிட்டல் மயம்: மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு !
“கொள்கையே தெரியாத வெற்றுக் கூட்டம்” – தவெக மீது உதயநிதி மறைமுக சாடல்
யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது – இருவருக்கும் எதிராக ஏற்கனவே நீதிமன்றில் வழக்குகளும் உள்ளன
கொன்கிரீட் கலவை இயந்திரத்தில் சிக்கி இளைஞன் பலி!
இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் அஞ்சல் கட்டணங்கள் அதிகரிப்ப்பு!


உலக வங்கி பிரதிநிதிகள் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளனர். 2022-23 பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்ட நெடுஞ்சாலைகள், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களை மீண்டும் தொடங்கும் வகையில் இந்த விஜயம் அமைகிறது.
குறித்த திட்டங்களை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயர் மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லென் (David Sislen) ஆகியோர் ஏற்கனவே திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவுடன் இது குறித்து ஆலோசித்துள்ளனர்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா (Kristalina Georgieva) பெப்ரவரி 17ஆம் திகதியன்று இலங்கை வரவுள்ளார்.
அவர் பெப்ரவரி 18ஆம் திகதி அன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயத்தின் போது விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் 5ஆம் மற்றும் 6வது மதிப்பாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

COMMENTS