← முகப்பு செய்திகள்

அனுராதபுரம், கெக்கிராவ – கிரிமெட்டியாவ பகுதியில் உள்ள குளத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இளைஞர் ஒர

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 44 பார்வைகள்
அனுராதபுரம், கெக்கிராவ – கிரிமெட்டியாவ பகுதியில் உள்ள குளத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இளைஞர் ஒர
அனுராதபுரத்தில் குளத்தில் படகு கவிழ்ந்து விபத்து! ஒருவர் பலி

அனுராதபுரம், கெக்கிராவ – கிரிமெட்டியாவ பகுதியில் உள்ள குளத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த இளைஞர் மேலும் ஐந்து நண்பர்களுடன் இணைந்து கிரிமெட்டியாவ குளத்தில் படகு சவாரி சென்ற போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆறு பேருடன் சென்ற படகு எதிர்பாராத விதமாக குளத்தின் நடுவே கவிழ்ந்துள்ளது. இதன்போது ஏனையவர்கள் தப்பிய போதிலும், மேற்படி இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கெக்கிராவ பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நீர்நிலைகளில் போதிய பாதுகாப்பு கவசங்களின்றி படகு சவாரி செய்வதைத் தவிர்க்குமாறு சுற்றுலாப் பயணிகளுக்குப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 06 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
2
கொச்சியில் பல நூற்றாண்டுகள் வாழ்ந்த யூதர்கள் எங்கே, எதற்காக சென்ற
செய்திகள் · 55 நிமிடங்கள் முன்னர்
3
பிரிட்டனின் கில்ட்ஃபோர்ட் (Guildford) பகுதியில் உள்ள சர்ரே பல்கலை
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
5
French Open Tennis Finalists: MajA Shvalinska And Alexender Zvere
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
6
Ind vs AFG 1st test 2026- When and Where to Watch Live
செய்திகள் · 3 மணி நேரம் முன்னர்
7
ஆஸ்திரியா மற்றும் இத்தாலியின் எல்லைப் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் (Alp
தலையங்கம் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net