அடுத்த மூன்றாண்டுகளுக்குள் தரம் 9 வரை கல்விச் சீர்திருத்தம் – நளிந்த ஜயதிஸ்ஸ !

Homeசெய்திகள்Design

அடுத்த மூன்றாண்டுகளுக்குள் தரம் 9 வரை கல்விச் சீர்திருத்தம் – நளிந்த ஜயதிஸ்ஸ !

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கல்விச் சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கத்தின் இரத்தினபுரி மாவட்ட நிகழ்வில் நேற்றையதினம் சனிக்கிழமை (07) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டில் 1 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், அடுத்த ஆண்டில் 2 மற்றும் 7 ஆம் தரங்களுக்கான சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் மேலும், 2028 ஆம் ஆண்டில் 3 மற்றும் 8 ஆம் தரங்களுக்கும், 2029 ஆம் ஆண்டில் 4 மற்றும் 9 ஆம் தரங்களுக்கும் கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த சில ஆண்டுகளில் தரம் 9 வரையிலான முழுமையான பாடத்திட்டங்கள் மறுசீரமைக்கப்படவுள்ளன. இந்தச் சீர்திருத்தங்களுக்குத் தேவையான பாடத்திட்டங்களை உருவாக்குவதில் கல்வி நிபுணர்கள் இணைந்துள்ளனர், முதல..

தித்வா புயல் பாதிப்புகளைச் சீரமைக்க ஒருங்கிணைந்த திட்டமிடல் அவசியம் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் வலியுறுத்தல் !
அமைச்சர்கள் தங்கள் விருப்பப்படி தொழில்களைத் தடை செய்ய முடியாது – சஜித் பிரேமதாச
மாணவர்கள் , இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது !
உணவுப் பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை – இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு
இன்று முதல் தபால் கட்டணங்கள் உயர்வு : கட்டணங்கள் குறித்த விபரங்கள்

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கல்விச் சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கத்தின் இரத்தினபுரி மாவட்ட நிகழ்வில் நேற்றையதினம் சனிக்கிழமை (07) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இந்த ஆண்டில் 1 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், அடுத்த ஆண்டில் 2 மற்றும் 7 ஆம் தரங்களுக்கான சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் மேலும், 2028 ஆம் ஆண்டில் 3 மற்றும் 8 ஆம் தரங்களுக்கும், 2029 ஆம் ஆண்டில் 4 மற்றும் 9 ஆம் தரங்களுக்கும் கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த சில ஆண்டுகளில் தரம் 9 வரையிலான முழுமையான பாடத்திட்டங்கள் மறுசீரமைக்கப்படவுள்ளன. இந்தச் சீர்திருத்தங்களுக்குத் தேவையான பாடத்திட்டங்களை உருவாக்குவதில் கல்வி நிபுணர்கள் இணைந்துள்ளனர், முதலாம் தரத்திற்கான சீர்திருத்தங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 6 ஆம் தரத்திற்கான பாடத்திட்ட மாற்றங்கள் மாத்திரம் அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பிரஜைகளை உருவாக்குவதே இந்தச் சீர்திருத்தங்களின் பிரதான நோக்கமாகும் என்றார்.