லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலய நிதியுதவியில் காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைக் கட்டடம்

Homeசெய்திகள்Design

லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலய நிதியுதவியில் காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைக் கட்டடம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் நிதியுதவியில் நிர்மானிக்கப்படவுள்ள சுமார் 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய வகுப்பறைக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை (07) நடைபெற்றது. கண்ணகி வித்தியாலய அதிபர் வாரி கங்கரப்பிள்ளை ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப்பணிப்பாளர் திருமதி தேவரஜனி உதயாகரன், மட்டக்களப்பு மேற்கு உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏறாவூர்ப்பற்று மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.சக்திதாஸ், கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பொறியியலாளர் என்.சதீஸ்குமார், கட்டடத்திற்கான நன்கொடையாளர்களான திருமதி வசந்தி நரேந்திரன், செல்வி சாரதா மனோகரன், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் எம்.அரியதாஸ், கொடுவாமடு கிராம அதிகாரி கு.பிரதீப்குமார், நன்கொடை அமைப்பான லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலய இணைப்பாளர்கள் ந.ஆனந்தராஜா, எல்.அனோஜன்ஈ ஏறாவூர்ப்பற்று மேற்கு கோட்டப் பாடசாலை அதிகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொற்றோர், பழைய மாணவர்கள் என பலரும் கலந்..

உங்கள் மொழியில் பேசலாம் எனக்கூறும் அரசாங்கமே அவ்வுரிமையை மறுக்கிறது – எம்.ஏ.சுமந்திரன்
கைப்பேசியால் தீக்கிரையான வீடு
நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு
இன்றைய வானிலை
போராட்டமின்றி 1,750 ரூபா சம்பளம் பெற்றுக்கொண்டோம் !

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் நிதியுதவியில் நிர்மானிக்கப்படவுள்ள சுமார் 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய வகுப்பறைக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை (07) நடைபெற்றது.
கண்ணகி வித்தியாலய அதிபர் வாரி கங்கரப்பிள்ளை ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப்பணிப்பாளர் திருமதி தேவரஜனி உதயாகரன், மட்டக்களப்பு மேற்கு உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏறாவூர்ப்பற்று மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.சக்திதாஸ், கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பொறியியலாளர் என்.சதீஸ்குமார், கட்டடத்திற்கான நன்கொடையாளர்களான திருமதி வசந்தி நரேந்திரன், செல்வி சாரதா மனோகரன், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் எம்.அரியதாஸ், கொடுவாமடு கிராம அதிகாரி கு.பிரதீப்குமார், நன்கொடை அமைப்பான லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலய இணைப்பாளர்கள் ந.ஆனந்தராஜா, எல்.அனோஜன்ஈ ஏறாவூர்ப்பற்று மேற்கு கோட்டப் பாடசாலை அதிகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொற்றோர், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
செங்கலடி பதுளை வீதியில் கஷ்ட பிரதேச பாடசாலையான காயான்குடா கண்ணகி வித்தியாலயத்திற்கு ஏற்கனவே லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தினால் இரண்டு மாடிகள் கொண்ட கட்டடம் மொன்று அமைதது பாடசாலை நிருவாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயம் இலங்கையின் கிழக்கு மாகாண மக்களுக்கு கடந்த பதினொரு வருடங்களாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. ஆறு ஆலயங்கள் முழுமையாக புனரமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட 46 குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்து கொடுத்துள்ளனர். கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு காணப்படும் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட குளாய் கிணறுகளும், 15 கிணறுகளும் இவர்களால் அமைக்கப்பட்டுள்ளன.
பின்தங்கிய பிரதேச மக்களின் வாழ்வாதாரததை கட்டியெழுப்புவதற்காக ஆடுகள் மற்றும் சுயதொழில் உதவிகளும் இலணடன ஈழபதீஸ்வரர் ஆலயத்தினரால் வழங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் போது லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு மற்றும் சமைத்த உணவு வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.