யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

Homeசெய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

யாழ் . நகர் பகுதியில் உள்ள வெற்றுக்காணிக்குள் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ் . போதனா வைத்தியசாலையின் பின் புறமாக உள்ள பொன்னம்ப

இனி இலங்கையில் ஓய்வூதியமில்லை!
புத்தர் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடிய இருவர் கைது!
முல்லைத்தீவில் களஞ்சியங்களில் நிறைத்துள்ள 304 மெற்றிக் தொன் நெல் : நெற்கொள்வனவு தாமதம் குறித்து துரைராசா ரவிகரன் கேள்வி
புத்தரின் ஊர்ணாவை திருடிய இருவர் கைது
இன்றைய வானிலை


யாழ் . நகர் பகுதியில் உள்ள வெற்றுக்காணிக்குள் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ் . போதனா வைத்தியசாலையின் பின் புறமாக உள்ள பொன்னம்பலம் வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியினை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை துப்பரவு செய்த வேளை , துப்பரவு பணியாளர்கள் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்றினை அவதானித்துள்ளனர்.அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன்  பொதி தொடர்பில் சோதனையிட்டனர். அதனுள் கையெறிகுண்டு , கலிபர் ரக துப்பாக்கி தோட்டாக்கள் காணப்பட்டுள்ளன. பொதியினுள் உள்ள வெடிபொருட்கள் தொடர்பில் யாழ் . நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் , நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் , அதன் பின்னரே மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிட முடியும் என பொலிஸார் தெரிவித்துள்னர்.  

COMMENTS