Homeசெய்திகள்

யாழ். ஊர்காவற்துறையில் காவல்துறையினரால் 17 வயதுப் சிறுவன் சுட்டுப் படுகொலை

இன்று அதிகாலை(10.02.2026) ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 17 வயதுச் சிறுவன்

இ – 20 உலகக் கிண்ண விலகலில் பங்களாதேஷுக்கு தண்டமில்லை: சர்வதேச கிரிக்கெட் சபை
யாழில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு – 17 வயது இளைஞர் உயிரிழப்பு
களுத்துறையில் 23 விமான குண்டுகள் மீட்பு
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு: மார்ச் 16 தீர்ப்பு
யாழில். ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி சூடு – சிறுவன் உயிரிழப்பு ; இருவர் கைது


இன்று அதிகாலை(10.02.2026) ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 17 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று அதிகாலை குறித்த சிறுவன் உட்பட மூவர் அல்லைப்பிட்டி பகுதியால் வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தவேளை வீதி கடமையில் இருந்த காவல்துறையினர்  அவர்களை வழி மறித்தனர். காவல்துறையினரின் சமிக்ஞையை மீறி பயணித்தமையால்  காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடாத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி சூட்டில் சித்தங்கேணியை சேர்ந்த குறித்த சிறுவன் பலியாகியுள்ளார். அவருடன் சென்ற நல்லூர் மற்றும் வட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த இருவர் ஊர்காவற்துறை  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.