Homeசெய்திகள்

மலையக மக்களுக்கு முன்னுரிமையளிப்பது அவசியம் – ஐ.நா பிரதிநிதி வலியுறுத்தல்

‘டித்வா’  பேரனர்த்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டியது மிக அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்க

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார்! சிறிதரன் எம்.பி அறிவிப்பு
மலேசிய இன்ஸ்டா பிரபலத்துக்கு ரூ.9.2 லட்சம் அபராதம் – நடந்தது என்ன?
வடக்கு, கிழக்கு உத்தேச அபிவிருத்தி வேலைத்திட்டம்- அமைச்சரவை அங்கீகாரம்
சுதந்திர தினமா? கரி நாளா? : மட்டு.நகரான்
இலங்கையில் சிம் கார்டு பதிவு விதிமுறைகள் திருத்தப்பட உள்ளன


‘டித்வா’  பேரனர்த்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டியது மிக அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ-பிரான்சே வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தமானது கட்டமைப்பு ரீதியான இடைவெளிகளையும், சமத்துவமின்மையையும் தோற்றுவித்துள்ளது. ஆகவே மக்களின் தேவைகள் தொடர்பான மதிப்பீட்டையும் விரைந்து மேற்கொள்வது அவசியம் என்றார்.
கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளியினால் மலையக பகுதிகள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த வார இறுதியில் பதுளை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டு, அங்கு களநிலைவரங்களைப் பார்வையிட்டதன் பின்னர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ-பிரான்சே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.