Homeசெய்திகள்

பூனைக்கு சித்திரவதை : இளைஞனுக்கு விளக்கமறியல்

பூனை ஒன்றை பிடித்து அதனை சித்திரவதை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமா

அணுசக்தி அரசியலில் திருப்பம் – ரஷ்யாவை விட்டு அமெரிக்காவை தெரிவு செய்த அர்மேனியா
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 103 பேருக்கு சிவப்பு பிடியாணை
1750 ரூபா சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து தோட்டப்புறங்களில் மகிழ்ச்சி கொண்டாட்டம்
செம்மணி புதைகுழிக்குள் இருந்து வெளியேற்றப்படும் வெள்ளம்
நிபா வைரஸ் தொற்றால் பங்களாதேஷில் ஒருவர் உயிரிழப்பு!


பூனை ஒன்றை பிடித்து அதனை சித்திரவதை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வலப்பனை நீதவான்  ஞாயிற்றுக்கிழமை (08) உத்தரவிட்டுள்ளார். திப்படுகொட பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இளைஞன் ஒருவன் பூனையை சித்திரவதை செய்யும் காணொளி  சமூக ஊடகங்களில் அண்மையில் பரவின. இந்த காணொளிக்கு விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனையடுத்து இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான இளைஞன் ஞாயிற்றுக்கிழமை (8) வலப்பனை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். அன்றையதினமே நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.