திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Homeசெய்திகள்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரரை அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வ

கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு ஒபாமாக்களின் இனவெறி வீடியோவை டிரம்ப் நீக்குகிறார்
முல்லைத்தீவில் களஞ்சியங்களில் நிறைத்துள்ள 304 மெற்றிக் தொன் நெல் : நெற்கொள்வனவு தாமதம் குறித்து துரைராசா ரவிகரன் கேள்வி
கைப்பேசியால் தீக்கிரையான வீடு
O/L பரீட்சையில் சித்தியடைந்த 300 மாணவர்களுக்கு நிதியுதவி
ஜேவிபி:மதிப்பதேயில்லை!


திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரரை அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது.
திருகோணமலை நகரின் கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள் அங்கீகரிக்கப்படாத குடிசை கட்டப்பட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டதாகக் கூறி கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
திருகோணமலை, கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜா விகாரையின் தலைவர் வணக்கத்துக்குரிய கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், வணக்கத்துக்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர், வணக்கத்துக்குரிய சுகிதவன்ச திஸ்ஸ தேரர் மற்றும் வணக்கத்துக்குரிய நந்த தேரர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

COMMENTS