Homeசெய்திகள்

செம்மணி மீள ஆரம்பம்!

செம்மணி - சித்துப்பாத்தி மன்னிதப் புதைகுழி 3ம் கட்ட அகழ்வுப்பணிக்கான முன்னாயர்த்த நடவடிக்கைகள் தொடர்பில் நீதவான் தலைமையில் இன்று(09) ஆய்வு மேற்கொள்ளப

சிறீதரன் சவால்:கோத்தா விசாரணைக்கு!
யாழில் இருந்து தப்பி சென்ற வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் 09 வருடங்களின் பின் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்
மட்டக்களப்பில் பட்டி பட்டியாக உள்நுழைந்த யானைகள்
எப்ஸ்டீன் கோப்புகள் மற்றும் யாரும் கேட்க விரும்பாத புலனாய்வு கேள்வி – பகுதி 1
மைக்கேலேஞ்சலோவின் ஓவியம் 27.2 மில்லியன் டாலர்கள் ஏலத்தில் சாதனை படைத்தது


செம்மணி – சித்துப்பாத்தி மன்னிதப் புதைகுழி 3ம் கட்ட அகழ்வுப்பணிக்கான முன்னாயர்த்த நடவடிக்கைகள் தொடர்பில் நீதவான் தலைமையில் இன்று(09) ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில் செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி அறிவிக்கப்படும் என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை இன்று அறிவித்துள்ளது.வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் குறித்து மறுஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் அப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர்,இடத்தை ஆய்வு செய்த நீதவான் அடுத்த விசாரணையை மார்ச் 16ஆம் திகதி நடத்தவும், அதேநாளில் மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான திகதியை நிர்ணயிக்கவும் உத்தரவிடடுள்ளார்.இதேவேளை, யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரி, மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான செலவு மதிப்பீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்;.