Homeசெய்திகள்

கேணல்.கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 33 ஆவது ஆண்டு நிiனெவழுச்சி நிகழ்வு. யேர்மனி ,நெற்றெற்றால்

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவீரர் பணிமனையால் நெற்றெற்றால் நகரில் 07.02.2026 அன்று மிக எழுச்சியாக நினைவுகூரப்பட்டது. இவ்வெழுச்சி நிகழ்வானது பொது

கொஸ்கம விபத்தில் பலர் காயம்
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார்! சிறிதரன் எம்.பி அறிவிப்பு
செம்மணி மனித புதைகுழி: 3ம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் மார்ச் 16இல் அறிவிக்கப்படும்!
உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
செம்மணி மீள ஆரம்பம்!


தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவீரர் பணிமனையால் நெற்றெற்றால் நகரில் 07.02.2026 அன்று மிக எழுச்சியாக நினைவுகூரப்பட்டது. இவ்வெழுச்சி நிகழ்வானது பொதுச்சுடேரற்றலுடன், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதைனத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து அக,சுடர்,மலர்வணக்கம், இசைவணக்கம் செலுத்தப்பட்டது. இவ்வெழுச்சி நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்ததுடன் நிகழ்வுகளாக வணக்கப்பாடல்கள், கவிவணக்கம், நினைவுரை, எழுச்சி நடனங்கள் போன்றன இடம்பெற்றன. சிறப்புரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அரசியற்பிரிவுப் பொறுப்பாளர் திரு.திருநிலவன் அவர்கள் ஆற்றினார்.
கேணல்.கிட்டு அவர்களின் நிiனைவத் தாங்கிய ஓவியப்போட்டியானது நாடுதழுவிய ரீதியில் நடாத்தப்பட்டது. அவ் ஓவியப்போட்டியில் பங்குபெற்றவர்களுக்கான சான்றிதழ்களும், வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் வெற்றிக்கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டன. அத்துடன் கேணல்.கிட்டு அவர்களின் நிiனெவழுச்சி நிகழ்விலே அரங்க நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களுக்கு கேணல். கிட்டு அவர்களின் நிiனைவத் தாங்கிய, சிறுவர்கள் ஓவியம் வரையக்கூடிய தாள்கள் அடங்கிய கையேடு ஒன்றும் வழங்கப்பட்டது. நிகழ்வின் இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி கையேற்றப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் பாடல் அனைவராலும் பாடப்பட்டதோடு, தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.