கிவுல் ஓயா திட்டம் பிழையானது என்கிறார் ரிஷார்ட் பதியுதீன்

Homeசெய்திகள்

கிவுல் ஓயா திட்டம் பிழையானது என்கிறார் ரிஷார்ட் பதியுதீன்

பேரினவாத இனம் வாழவேண்டும் என்பதற்காக காடுகளை அழித்து உருவாக்கப்படும் கிவுல் ஓயா திட்டம் பிழையானது என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் ப

“விஜய்யின் அரசியல் வருகை திமுகவின் வாக்குகளையே பாதிக்கும்” – டிடிவி.தினகரன்
கொன்கிரீட் கலவை இயந்திரத்தில் சிக்கி இளைஞன் பலி!
எப்ஸ்டீன் கோப்புகளில் மேக்ரான் பெயர் இருப்பதாக போலி தகவல்கள்: பின்னணியில் ரஷ்யா?
அவசரகால சட்டம் பிக்குகளிற்கு இல்லை!
எஸ். ஜெய்சங்கரை சந்தித்தார் ரில்வின் சில்வா


பேரினவாத இனம் வாழவேண்டும் என்பதற்காக காடுகளை அழித்து உருவாக்கப்படும் கிவுல் ஓயா திட்டம் பிழையானது என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வவுனியா சாளம்பைக்குளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“கிவுல் ஓயா திட்டம் என்பது தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில் பாரம்பரியமான ஒரு பெரிய காட்டை அழித்து உருவாக்கப்படவுள்ளது. இந்நிலையில் குறித்த திட்டத்திற்காக பழமையான 5,000 ஏக்கர் உள்ள காட்டை அழிக்கவுள்ளனர். பேரினவாத இனம் வாழ வேண்டும் என்பதற்காகவும், வேறு மாவட்டத்தில் வாழ்கின்ற பேரினவாத மக்களை இங்கே கொண்டு வந்து குடியேற்றம் செய்வதானது, மிகப்பெரிய சதியாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சதிக்காகவே 5000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள காடுகளை அழித்து செய்கின்ற கிவுல் ஓயா திட்டமானது ஒரு பிழையான திட்டமாகும். சுற்றாடலை பாதுகாக்க வேண்டும் என்று சிந்திப்பவர்கள் இதற்கு எதிராகவே வழக்கு போட வேண்டுமே தவிர 100 வருடம் பழமையான மன்னார் – புத்தளம் வீதியை மூடுவதற்கு வழக்கு போட்டு வெற்றியடைந்து, அதன் ஊடாக அதனை நியாயப்படுத்தி பேசுவது என்பது நியாயமானதன்று எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கிவுல் ஓயா திட்டம்தான் உண்மையான சுற்றுச்சூழலிற்கு பாதிப்பாகும், தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழ்கின்ற வவுனியா மாவட்டத்திலே அல்லது வன்னி மாவட்டத்திலே இவ்வாறு செய்வதானது மிகவும் கண்டிக்கத்தக்கது.
மேலும் இதற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தமிழ் தரப்பு எங்களை அழைக்கவில்லை என்றாலும் எதிர்காலத்தில் தங்கள் கட்சியும் பூரண ஆதரவை கட்டாயம் வழங்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

COMMENTS