Homeசெய்திகள்

ஆபரேஷன் சிந்தூரின்போது சேதமடைந்த விமானப் படை தளங்களை சீரமைக்கிறது பாகிஸ்தான்

 காஷ்மீரின் பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பதிலடி​யாக, பாகிஸ்​தான் தீவிர​வாத முகாம்​கள், ராணுவ மற்​றும் விமானப்​படை தளங்​கள் மீது ஆபரேஷன் சிந்தூர

யாழ். மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபரால் பரபரப்பு
சூடுபிடித்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் – புதிய மாவட்டத் தலைவர்களுக்கு அவசர அழைப்பு
வனிந்து ஹசரங்க தொடரிலிருந்து விலகல்
இலங்கைக்கான மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்திற்கு 22.4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி
யாழில்.மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞன் உயிரிழப்பு


 காஷ்மீரின் பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பதிலடி​யாக, பாகிஸ்​தான் தீவிர​வாத முகாம்​கள், ராணுவ மற்​றும் விமானப்​படை தளங்​கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்​திய ராணுவம் தாக்​குதல் நடத்​தி​யது.
இதில் பாகிஸ்​தானில் உள்ள போஹ்லாரி விமானப்​படை தளத்தின் விமான நிறுத்​தும் இடம் பலத்த சேதமடைந்​தது. இந்நிலையில், அப்​பகு​தியை சீரமைக்​கும் பணி​களில் பாகிஸ்தான் விமானப்​ படை ஈடு​பட்​டுள்​ளது தெரிய​வந்​துள்​ளது.
குறிப்​பாக, ஜனவரி 28 அன்று எடுக்​கப்​பட்ட செயற்​கைக்​கோள் புகைப்​படங்​களின் ​படி, சேதமடைந்த ஹேங்​கரின் (வி​மான நிறுத்தும்​ இடம்) பச்சை நிறக் கூரை​யின் சில பகு​தி​கள் பிரித்​தெடுக்​கப்​பட்​டுள்​ளன. இது அந்த இடத்​தைச் சீரமைப்​ப​தற்​கான ஆரம்​பகட்ட வேலை​யாகக் கருதப்​படு​கிறது.
அந்​தப் புதிய புகைப்​படம், அந்த கட்​டிடம் கைவிடப்​பட்ட நிலையில்​ இருந்து மாற்​றமடைந்​துள்​ளதைச் சுட்​டிக்​காட்​டு​கிறது. இதே​போன்ற சீரமைப்​புப் பணி​கள் முரிட், சுக்​கூர் மற்​றும் நூர்கான் ஆகிய விமானப்​படை தளங்​களி​லும் நடை​பெற்று வருவது செயற்​கைக்​கோள்​ புகைப்​படங்​கள்​ மூலம்​ தெரிய​வந்துள்ளது.