← முகப்பு இன்றைய ராசிபலன்

Which date born women are born to achieve business success according to

🕐 09 Jun 2026 📂 இன்றைய ராசிபலன் 4 பார்வைகள்
Which date born women are born to achieve business success according to

ஒருவர் நினைத்த வாழ்க்கையை அடைய வேண்டுமென்றால் கடுமையான உழைப்புடன் அதிர்ஷ்டத்தின் ஆசீர்வாதமும் வேண்டும். முதலாளியாக இருக்க வேண்டுமென்பதுதான் பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கிறது, ஆனால் வியாபாரத்தில் வெற்றியாளர்களாக மாறுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. வணிகத்தில் வெற்றி என்பது திறமையால் மட்டுமல்ல, துணிச்சல் மற்றும் கடின உழைப்பாலும் கிடைக்கிறது.

எண் கணிதத்தின் படி வணிகத்தில் சிறந்து விளங்குவதற்கான இயல்பான குணாதிசயங்களுடன் சிலர் பிறக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே தலைமைப் பண்பு, படைப்பாற்றல் மற்றும் வணிகத் திறனைக் கொண்டிருப்பதாகவும், வெற்றிகரமான தொழில் முயற்சிகளைத் தொடங்கும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதாகவும் எண் கணித நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த பதிவில் எந்தெந்த தேதிகளில் பிறந்த பெண்கள் வியாபாரத்தில் கொடிகட்டி பறப்பவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

அனைத்து மாதத்திலும் 1, 10, 19 மற்றும் 28 தேதிகளில் பிறந்தவர்கள்

அனைத்து மாதத்திலும் 1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்கள் இயல்பிலேயே தலைமைப்பண்பு கொண்ட தலைவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் சுதந்திரமான சிந்தனை கொண்டவர்கள், லட்சியவாதிகள் மற்றும் துணிச்சலுடன் சவால்களை எதிர்கொள்பவர்களாக இருப்பார்கள். எண் கணிதத்தின்படி, இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படுகிறார்கள். இக்குணங்கள் பெரும்பாலும் தொழில்முனைவோராகவும் முடிவெடுப்பவர்களாகவும் வெற்றிபெற உதவுகின்றன.

அனைத்து மாதத்திலும் 5, 14 மற்றும் 23 தேதிகளில் பிறந்தவர்கள்

அறிவு மற்றும் தகவல் தொடர்புக்கான கிரகமான புதன், 5, 14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களை ஆள்கிறார். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் பொதுவாக படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், நெகிழ்வுத்தன்மை உடையவர்களாகவும், சூழ்நிலைக்கேற்ப சிந்தித்துச் செயல்படக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் வாய்ப்புகளைக் கண்டறிந்து, சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப செயல்படுவார்கள். அவர்கள் தொழில் உலகில் வலிமைமிக்க சக்திகளாகத் திகழ்வார்கள். இதனால் அவர்கள் வியாபாரத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

Which Date Born Women Are Born to Achieve Business Success

அனைத்து மாதத்திலும் 8, 17 மற்றும் 26 தேதிகளில் பிறந்தவர்கள்

அனைத்து மாதத்திலும் 8, 17 மற்றும் 26 ஆம் தேதிகளில் பிறந்த பெண்கள், ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் பண மேலாண்மைக்கான கிரகமான சனிபகவானால் ஆளப்படுகிறார்கள். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் புதிதாகத் தொழில்களைத் தொடங்கி, அவற்றை நீண்ட காலத்திற்கு வெற்றிகரமாக நடத்துவதற்கான பொறுமையையும் விடாமுயற்சியையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த குணங்கள் அவர்களை வியாபார உலகின் ராணியாக மாற்றுகிறது.

அனைத்து மாதத்திலும் 3, 12, 21 மற்றும் 30 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்

அனைத்து மாதத்திலும் 3, 12, 21 மற்றும் 30 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் ஞானம், வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கான கிரகமான குருபகவானால் ஆளப்படுகிறார்கள். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் பெரும்பாலும் வலுவான நிர்வாகத் திறன்களைக் கொண்டிருப்பதோடு, குழுக்களுக்கு உத்வேகம் அளித்து வெற்றிகரமான தொழில்களைக் கட்டமைப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் கார்ப்பரேட் உலகில் முடிசூடா ராணியாக இருப்பார்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net