← முகப்பு செய்திகள்

Singapore Open 2026: Satwiksairaj Rankireddy and Chirag Shetty clinched the Singapore Open

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 12 பார்வைகள்
Singapore Open 2026: Satwiksairaj Rankireddy and Chirag Shetty clinched the Singapore Open

சிங்கப்பூர்: 2026 சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர ஆடவர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று, இத்தொடரில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடி என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள சாத்விக் – சிராக் ஜோடி, இந்தோனேசியாவின் ஃபஜர் அல்பியான் மற்றும் முகமது ஃபிக்ரி ஜோடியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்திய ஜோடி சற்றே தடுமாறியது. முதல் கேமை 18-21 என்ற கணக்கில் இந்தோனேசிய ஜோடி கைப்பற்றியது.

Singapore Open 2026 Satwik-Chirag Create History by Winning First Men s Doubles Title for India

எனினும், மனதிடம் தளராமல் விளையாடிய இந்திய வீரர்கள், அடுத்த இரண்டு கேம்களில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நீண்ட நேரம் நீடித்த 'ரேலிகளில்' திறமையாகச் செயல்பட்ட சாத்விக் – சிராக் ஜோடி, அடுத்தடுத்த கேம்களை 21-17, 21-16 என்ற கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. சுமார் 1 மணி 13 நிமிடங்கள் இந்த விறுவிறுப்பான ஆட்டம் நீடித்தது.

இந்த வெற்றியின் மூலம் தங்களது 2 ஆண்டுகால காத்திருப்புக்கு இந்திய ஜோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கடைசியாக 2024-ம் ஆண்டு தாய்லாந்து ஓபன் தொடரில் இவர்கள் பட்டம் வென்றிருந்தனர். அதன் பிறகு 4 முறை பல்வேறு தொடர்களில் இறுதிப்போட்டி வரை முன்னேறியும், சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது சிங்கப்பூர் ஓபன் (சூப்பர் 750) பட்டத்தை வென்று மீண்டும் உலகின் முன்னணி ஜோடி என்பதை நிரூபித்துள்ளனர்.

இது இவர்களது ஒட்டுமொத்த பாட்மிண்டன் வாழ்வில் 9-வது வேர்ல்டு டூர் பட்டமாகும். மேலும், சூப்பர் 750 அந்தஸ்து கொண்ட தொடரில் இவர்கள் வெல்லும் 3-வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரின் அரையிறுதியில் நடப்பு உலக சாம்பியன்களான தென்கொரிய ஜோடியை வீழ்த்தி இவர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெற்றி உறுதியானதும் சாத்விக் மற்றும் சிராக் இருவரும் மைதானத்திலேயே படுத்துக் கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சாத்விக் தனது சகோதரர் சமீபத்தில் தந்தை ஆனதை முன்னிட்டு, 'குழந்தையைத் தொட்டில் ஆட்டும்' செய்கையைச் செய்து அந்த வெற்றியைத் தனது குடும்பத்திற்கு அர்ப்பணித்தார். சிராக் தனது வழக்கமான ஆக்ரோஷமான முழக்கத்துடன் மைதானத்தில் நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

RCB vs GT Final: ஆர்சிபி-க்கு ஆரம்பமே வெற்றி.. குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து தமிழக வீரர் நீக்கம்

சிங்கப்பூர் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் அளித்த பெரும் ஆதரவு தங்களுக்குப் பெரிய உந்துதலாக இருந்ததாக வெற்றிக்குப் பிறகு வீரர்கள் தெரிவித்தனர். இந்த வரலாற்று வெற்றி, இந்த சீசனின் அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய ஜோடிக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்
செய்திகள்
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு மட்டும் புரியக் கூடியவற்றை பாமரர்க்கும் புரி
09 Jun 2026
செய்திகள்
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels) வீடியோவிற்காகப் பொது இடத்தில் துண்டை கட்டிக
09 Jun 2026
செய்திகள்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா
09 Jun 2026
செய்திகள்
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்
09 Jun 2026
செய்திகள்
போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய ஜான் பிரிட்டோ நான் இல்லை என்று எம்எல்ஏ லீமா ரோஸின் சகோதர்
09 Jun 2026
செய்திகள்
Ind vs AFG- Rishabh Pant Batting Approach Critiqued By Ashwin Insights On
09 Jun 2026
முக்கிய செய்திகள்
1
அவசரகால சட்டத்தை நீடிக்கும் தீர்மானம் 128 மேலதிக வாக்குகளால் இன்ற
தமிழ் · 09 Jun 2026
2
உயிரிழந்தவர், கிளிநொச்சி நகரைச் சேர்ந்த 23 வயதுடைய சிவகுருநாதன் ச
3
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு
4
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels
5
ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெ
தமிழ் · 09 Jun 2026
6
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர
7
மலையக பகுதிகளில் உள்ள மீண்டும் புனரமைக்க முடியாத வீடுகளுக்கு 50 இ
தமிழ் · 09 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net