Saturn Venus Forms Navpancham Rajyog On 25 June 2026: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் அந்த கிரகங்களினால் உருவாகும் யோகம் கூடுதல் தாக்கத்தை உண்டாக்கும். அந்த வகையில் கிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலனைத் தருபவர்.
இப்படிப்பட்ட சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். மறுபுறம் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இவ்விரு கிரகங்களினால் ஜூன் 25 ஆம் தேதி மங்களகரமான நவபஞ்சம ராஜயோகம் உருவாகவுள்ளது.
ஜோதிடத்தில் சனியும், சுக்கிரனும் நட்பு கிரகங்களாக கருதப்படுகின்றன. எனவே இவ்விரு கிரகங்களால் மங்களகரமான நவபஞ்சம யோகம் உருவாகும் போது, அதன் தாக்கம் இன்னும் சிறப்பாக இருக்கும். முக்கியமாக இந்த யோகம் சில மணிநேரங்களுக்கு மட்டுமே முழுமையாக இருந்தாலும், 4 ராசிக்காரர்கள் மிகவும் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது சனி சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
சனி சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க நினைத்தால், இக்காலம் ஏற்றதாக இருக்கும். சிலருக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மிதுனம்
சனி சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் செல்வம் பெருகும்.

கன்னி
சனி சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் கன்னி ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக வேலையை மாற்ற நினைத்துக் கொண்டிருந்தால், அதற்கான வாய்ப்பு இக்காலத்தில் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உறவுகள் வலுவடையும்.

கும்பம்
சனி சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் கும்ப ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பத்தைப் பெறுவார்கள். பல புதிய வழிகளில் இருந்து பணம் வந்து சேரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட காலமாக வாட்டி வதைத்த மன அழுத்தம் குறைந்து, மனதில் சந்தோஷம் பெருகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.