← முகப்பு செய்திகள்

RCB vs GT IPL Final: Gujarat Titans Lose because of Tight Schedule;

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 12 பார்வைகள்
RCB vs GT IPL Final: Gujarat Titans Lose because of Tight Schedule;

அகமதாபாத்: 2026 ஐபிஎல் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியிடம் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து கோப்பையைத் தவறவிட்டுள்ளது. இந்த நிலையில், குஜராத் அணியின் இந்தத் தோல்விக்கு அந்த அணியின் பயணக் களைப்பும், போதிய ஓய்வில்லாததுமே முக்கியக் காரணம் எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பிசிசிஐ-யின் போட்டி அட்டவணையைச் சாடிப் பேசியுள்ளார்.

சண்டிகரில் இருந்து சனிக்கிழமை மதியம் அகமதாபாத் புறப்பட வேண்டிய குஜராத் வீரர்கள், அங்கு வீசிய கடுமையான புயல் மற்றும் மழை காரணமாகப் பல மணி நேரம் விமான நிலையத்திலேயே முடங்கினர். சனிக்கிழமை இரவு 10:45 மணிக்கு மேல் தான் அவர்கள் அகமதாபாத் வந்தடைந்தனர். நள்ளிரவில்தான் வீரர்கள் ஹோட்டல் அறைகளுக்குச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி என்பதால் அவர்களுக்குப் பேட்டிங் பயிற்சி செய்யவோ, போதிய ஓய்வெடுக்கவோ 24 மணி நேரத்திற்கும் குறைவான காலமே கிடைத்தது.

RCB vs GT IPL Final Gujarat Titans Lose because of Tight Schedule Sunil Gavaskar targets BCCI

இது குறித்துப் பேசிய சுனில் கவாஸ்கர், "வீரர்களுக்குப் போதிய ஓய்வு என்பது மிகவும் அவசியமான ஒன்று. விமானம் எப்போது புறப்படும் என்ற பதற்றத்துடனே வீரர்கள் காத்திருந்தனர். இது உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் அவர்களைப் பாதித்திருக்கும். எனவே, மாற்று நாளான 'ரிசர்வ் டே' திங்கட்கிழமை இருக்கும் நிலையில், குஜராத் அணிக்கு நியாயம் வழங்கும் வகையில் இந்த இறுதிப்போட்டியை ஒரு நாள் தள்ளி வைத்திருக்கலாம்" எனத் தெரிவித்தார்.

கவாஸ்கரின் இந்தக் கருத்து குஜராத் அணியின் தோல்வியின் மூலம் உண்மையாகியுள்ளது. இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. கேப்டன் சுப்மன் கில் 10 ரன்களிலும், சாய் சுதர்சன் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் மட்டுமே போராடி 50 ரன்கள் எடுத்தார். பயணக் களைப்பும், போதிய பயிற்சி இல்லாததுமே குஜராத் அணியின் இந்த மோசமான பேட்டிங்கிற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

மறுபுறம், பெங்களூரு அணி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தகுதிச் சுற்றில் வென்றது முதல் அகமதாபாத்திலேயே தங்கிப் போதிய ஓய்வு எடுத்திருந்தது. இதை பெங்களூரு கேப்டன் ரஜத் படிதாரும் ஒப்புக்கொண்டார். தங்களுக்குப் போதிய ஓய்வு கிடைத்ததால் புத்துணர்ச்சியுடன் களம் கண்ட பெங்களூரு அணி, விராட் கோலியின் 75 ரன்கள் அதிரடி ஆட்டத்தால் 18 ஓவர்களில் இலக்கை எட்டி சாம்பியன் ஆனது.

IPL Final: ஐஸ் கட்டிகளை கொட்டிட்டாங்க.. 2 கோப்பை வென்று கொடுத்த ஆண்டி பிளவருக்கு ஆர்சிபி சர்ப்ரைஸ்

இறுதிப்போட்டிக்கு முன்பாக குஜராத் அணியின் உதவிப் பயிற்சியாளர் பார்த்திவ் படேல், "இறுதிப்போட்டியில் விளையாடும் போது சோர்வு ஒரு பொருட்டல்ல" என்று கூறினாலும், மைதானத்தில் குஜராத் வீரர்களின் செயல்பாட்டில் சோர்வு அப்பட்டமாகத் தெரிந்தது. பிசிசிஐ இனிவரும் காலங்களில் இறுதிப்போட்டிக்கு முன்பு இரு அணிகளுக்கும் சமமான ஓய்வு நேரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net