← முகப்பு செய்திகள்

RCB vs GT IPL 2026 Final: Royal Challengers Bengaluru face Gujarat Titans

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 32 பார்வைகள்
RCB vs GT IPL 2026 Final: Royal Challengers Bengaluru face Gujarat Titans

அகமதாபாத்: 2026 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. டாஸ் வென்றதால் பெங்களூரு அணிக்கு ஆரம்பமே வெற்றி என அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் தமிழக வீரர் சாய் கிஷோர் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அர்ஷத் கான் அணியில் சேர்க்கப்பட்டார்.

குஜராத் டைட்டன்ஸ்: சுப்மன் கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ஜேசன் ஹோல்டர், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவேதியா, ரஷித் கான், நிஷாந்த் சிந்து, ககிசோ ரபாடா, அர்ஷத் கான், முகமது சிராஜ்.

மாற்று வீரர்கள் (இம்பாக்ட் பிளேயர்): பிரசித் கிருஷ்ணா, கிளென் பிலிப்ஸ், அனுஜ் ராவத், குமார் குஷாக்ரா, சாய் கிஷோர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், குருணால் பாண்டியா, டிம் டேவிட், ஜித்தேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஸ்வர் குமார், ஜாஷ் ஹேசில்வுட், ஜேக்கப் டஃபி, ரசிக் சலாம்.

மாற்று வீரர்கள் (இம்பாக்ட் பிளேயர்): வெங்கடேஷ் ஐயர், கனிஷ்க் சோஹன், ஸ்வப்னில் சிங், அபிநந்தன் சிங், ஜோர்டான் காக்ஸ்.

RCB vs GT IPL 2026 Final Toss Update for Royal Challengers Bengaluru vs Gujarat Titans

டாஸ் வென்ற பின் பேசிய பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதார், "இது ஒரு சிறந்த ஆடுகளம். ஆட்டம் நடைபெறும் 40 ஓவர்களும் இந்த ஆடுகளம் மாறாது என்றே கருதுகிறேன். எனவே அவர்களைக் குறைந்த ரன்களில் கட்டுப்படுத்த முயற்சிப்போம். கடந்த கால வெற்றிகளை விட, தற்போது நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். மைதானத்தில் கூடியுள்ள ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குப் பெரிய பலம். நாங்கள் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களம் காண்கிறோம்" என்றார்.

குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் கூறுகையில், "நாங்கள் டாஸ் வென்றிருந்தாலும் பேட்டிங்கைத் தான் தேர்வு செய்திருப்போம். முதலில் அதிக ரன்களைக் குவித்து அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த ஆடுகளத்தில் இது 3-வது போட்டி. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆரம்பத்தில் 2 முதல் 3 ஓவர்கள் சாதகமாக இருக்கும். உலகின் மிகப்பெரிய மைதானத்தில் விளையாடுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். சாய் கிஷோருக்குப் பதிலாக அர்ஷத் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்தார்.

அகமதாபாத் மைதானத்தின் 6-வது எண் கொண்ட பிட்ச்சில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. மைதானத்தின் இருபுறமும் எல்லைக் கோடுகள் 66 மீட்டர் தொலைவில் உள்ளன. இது கலப்பு மண் கொண்ட பிட்ச் என்பதால் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருக்கும். அதே சமயம், பிட்ச் சற்று மந்தமாக இருக்க வாய்ப்புள்ளதால் சுழற்பந்து வீச்சுக்கு அவ்வளவாக ஒத்துழைக்காது. வேகப்பந்து வீச்சாளர்கள் சரியான லெந்தில் பந்துவீசினால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்.

மேலும் செய்திகள்
செய்திகள்
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு மட்டும் புரியக் கூடியவற்றை பாமரர்க்கும் புரி
09 Jun 2026
செய்திகள்
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels) வீடியோவிற்காகப் பொது இடத்தில் துண்டை கட்டிக
09 Jun 2026
செய்திகள்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா
09 Jun 2026
செய்திகள்
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்
09 Jun 2026
செய்திகள்
போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய ஜான் பிரிட்டோ நான் இல்லை என்று எம்எல்ஏ லீமா ரோஸின் சகோதர்
09 Jun 2026
செய்திகள்
Ind vs AFG- Rishabh Pant Batting Approach Critiqued By Ashwin Insights On
09 Jun 2026
முக்கிய செய்திகள்
1
அவசரகால சட்டத்தை நீடிக்கும் தீர்மானம் 128 மேலதிக வாக்குகளால் இன்ற
தமிழ் · 09 Jun 2026
2
உயிரிழந்தவர், கிளிநொச்சி நகரைச் சேர்ந்த 23 வயதுடைய சிவகுருநாதன் ச
3
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு
4
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels
5
ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெ
தமிழ் · 09 Jun 2026
6
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர
7
மலையக பகுதிகளில் உள்ள மீண்டும் புனரமைக்க முடியாத வீடுகளுக்கு 50 இ
தமிழ் · 09 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net