← முகப்பு இன்றைய ராசிபலன்

Jupiter Saturn Make Navpancham Rajyog On 02 June 2026: குரு பெயர்ச்சியானது ஜூன்

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 22 பார்வைகள்
Jupiter Saturn Make Navpancham Rajyog On 02 June 2026: குரு பெயர்ச்சியானது ஜூன்

Jupiter Saturn Make Navpancham Rajyog On 02 June 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குரு பகவான், 12 ஆண்டுகளுக்கு பின் தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழைவுள்ளார். இந்த குரு பெயர்ச்சியானது ஜூன் 02 ஆம் தேதி நிகழவுள்ளது.

அதோடு குரு பகவான் சனியுடன் இணைந்து நவபஞ்சம யோகத்தை உருவாக்கவுள்ளார். ஜோதிடத்தைப் பொறுத்தவரை, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் செல்வாக்குமிக்க நிகழ்வாகும். அதுவும் இந்த யோகம் மங்களகரமான யோகங்களுள் ஒன்றாகும். இந்த யோகத்தின் போது குரு பகவானும், சனி பகவானும் வலிமையான நிலையில் இருப்பதால், சில ராசிக்காரர்கள் பன்மடங்கு நன்மைகளைப் பெறவுள்ளனர்.

இப்போது 12 ஆண்டுகளுக்கு பின் குரு மற்றும் சனி இணைந்து உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Jupiter Saturn Make Navpancham Rajyog On 02 June 2026 List Of Lucky Zodiac Signs

கடகம்

கடக ராசியின் முதல் வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இந்த குரு பெயர்ச்சியால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் கடக ராசிக்காரர்களின் கௌரவமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவதோடு, அதிலிருந்து நல்ல லாபமும் கிடைக்கும். முக்கியமாக முடிவெடுக்கும் திறன் மேம்படும். விடாமுயற்சியுடன் உழைத்து வந்தவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் இனி நிச்சயம் கிடைக்கும்.

Jupiter Saturn Make Navpancham Rajyog On 02 June 2026 List Of Lucky Zodiac Signs

கும்பம்

கும்ப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இந்த குரு பெயர்ச்சியால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் கும்ப ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நிதி நிலைமை வழக்கத்தை விட கணிசமாக வலுபெறும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் எதிர்பாராத நிதி நன்மைகளைத் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்களை பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வங்கி, நிதி, கல்வி மற்றும் ஜவுளித் துறைகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காணலாம்.

Jupiter Saturn Make Navpancham Rajyog On 02 June 2026 List Of Lucky Zodiac Signs

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இந்த குரு பெயர்ச்சியால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். முதலீடுகளை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படக்கூடும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net