← முகப்பு இன்றைய ராசிபலன்

June 2026 Planet Transits: ஜூன் மாதத்தில் கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களினால், மேஷம் முதல்

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 14 பார்வைகள்
June 2026 Planet Transits: ஜூன் மாதத்தில் கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களினால், மேஷம் முதல்

June 2026 Planet Transits: 2026 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் நுழையவுள்ளோம். ஜோதிடத்தின் படி, ஜூன் மாதமானது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. முக்கியமாக மாதத்தின் தொடக்கத்தில், அதுவும் ஜூன் 02 ஆம் தேதி தேவர்களின் குருவான குரு பகவான் கடக ராசிக்குள் நுழைவுள்ளார்.

அதைத் தொடர்ந்து ஜூன் 08 ஆம் தேதி அசுரர்களின் குருவான சுக்கிரன் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். அதன் பின் ஜூன் 22 ஆம் தேதி கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இப்படி கடக ராசியில் 3 கிரகங்கள் பயணிக்கவுள்ளன. இதற்கிடையில் கிரகங்களின் ராஜாவான சூரியன் ஜூன் 15 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். மேலும் ஜூன் 21 ஆம் தேதி செவ்வாய் ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார்.

இப்படி அனைத்து கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களினால், ஜூன் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதில் சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். அதுவும் அவர்களின் தன்னம்பிக்கையும், மரியாதையும் அதிகரிக்கும் மற்றும் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இப்போது ஜூன் மாத கிரக பெயர்ச்சிகளால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

June 2026 Planet Transits List Of Lucky Zodiac Signs

ரிஷபம்

ஜூன் மாத கிரக பெயர்ச்சிகளால் ரிஷப ராசிக்காரர்களுக்கு இம்மாதமானது அற்புதமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வோ, சம்பள உயர்வோ கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நிதி பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திருமணம் அல்லது குழந்தைகள் தொடர்பான கவலைகள் தீரும்.

June 2026 Planet Transits List Of Lucky Zodiac Signs

சிம்மம்

ஜூன் மாதத்தில் சூரியன் மற்றும் செவ்வாயின் நிலைகளால் சிம்ம ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை வலுபெறும். இம்மாதத்தில் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். வேலையில் மாற்றங்களைக் காண வாய்ப்புள்ளது. புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு இருந்தால், அது நிறைவேற வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, உடல்நலம் மேம்படும்.

June 2026 Planet Transits List Of Lucky Zodiac Signs

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதமானது சாதகமாக இருக்கும். ஏனெனில் குரு பகவான் இந்த ராசியில் உச்சமடைகிறார். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. இம்மாதத்தின் நடுப்பகுதியில் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். சமூக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

June 2026 Planet Transits List Of Lucky Zodiac Signs

மிதுனம்

ஜூன் மாத கிரக பெயர்ச்சிகளால் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி முன்னேற்றம் ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வங்கி இருப்பு அதிகரிக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

June 2026 Planet Transits List Of Lucky Zodiac Signs

தனுசு

ஜூன் மாத கிரக பெயர்ச்சிகளால் தனுசு ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நிதி ரீதியாக நல்ல உயர்வு ஏற்படும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. இம்மாதத்தில் முதலீடுகளை செய்தால் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் இம்மாதத்தில் வேலை தொடர்பாக எடுக்கும் எந்த ஒரு முடிவுகளும் நல்ல பலன்களைத் தரும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net