← முகப்பு செய்திகள்

IPL Final 2026 RCB Vs GT- Shubman gill gives Early success for

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 16 பார்வைகள்
IPL Final 2026 RCB Vs GT- Shubman gill gives Early success for

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

போட்டியை அதிரடியாகத் தொடங்க நினைத்த குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில், ஆரம்பத்திலேயே 2 பவுண்டரிகளுடன் 8 பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி அளித்தார். Jacob Duffy வீசிய ஓவரில், பந்தின் வேகத்தையும் ஸ்விங்கையும் சரியாகக் கணிக்கத் தவறிய கில், விக்கெட்டைப் பறிகொடுத்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

சுப்மன் கில்லின் விக்கெட் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பவர்பிளேயில் ஒரு மிகப்பெரிய பின்னடைவாகும். நரேந்திர மோடி மைதானத்தில் கில் நிலைத்து நின்று ஆடினால் எவ்வளவு பெரிய ஸ்கோரையும் எட்ட முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் ஆரம்பத்திலேயே அவுட்டானது ஆர்சிபி பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் உத்வேகத்தைத் தந்துள்ளது.

IPL 2026 Final: விராட் கோலி கிடையாது.. இந்த வீரர் தான் ஆட்டநாயகன் விருது வெல்வார்.. டிவில்லியர்ஸ் கணிப்பு

இதன் காரணமாக, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு ரன் சேர்க்கும் அழுத்தம் இப்போது கணிசமாக அதிகரித்துள்ளது. அகமதாபாத் மைதானம் எப்போதும் சுப்மன் கில்லுக்கு மிகவும் பிடித்தமான கோட்டையாக இருந்துள்ளது. இந்த மைதானத்தில் அவரது ஐபிஎல் புள்ளி விவரங்கள் வியக்கத்தக்கவை. இந்த மைதானத்தில் கில் 50-க்கும் அதிகமான பேட்டிங் சராசரியைக் கொண்டுள்ளார்.

அகமதாபாத்தில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 140-க்கும் மேல் உள்ளது. இதே மைதானத்தில் தான் கடந்த காலங்களில் மிக முக்கியமான சதங்களையும், நடப்பு 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 37 பந்துகளில் 64 ரன்களையும் குஜராத் மைதானத்தில் கில் விளாசியிருந்தார்.

IPL 2026 Final: இந்த வீரரை அணிக்குள் சேர்த்து விட்டால், ஆர்சிபி தோல்வி உறுதி.. ஸ்ரீகாந்த் அதிருப்தி

இப்படிப்பட்ட ஒரு ரன்குவிக்கும் இயந்திரம் இறுதிப்போட்டியில் 10 ரன்களுக்குள் சுருண்டது குஜராத் அணிக்கு பெரிய ஏமாற்றமே. இதனால் குஜராத் அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் மீது கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதே சமயம், ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்
செய்திகள்
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு மட்டும் புரியக் கூடியவற்றை பாமரர்க்கும் புரி
09 Jun 2026
செய்திகள்
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels) வீடியோவிற்காகப் பொது இடத்தில் துண்டை கட்டிக
09 Jun 2026
செய்திகள்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா
09 Jun 2026
செய்திகள்
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்
09 Jun 2026
செய்திகள்
போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய ஜான் பிரிட்டோ நான் இல்லை என்று எம்எல்ஏ லீமா ரோஸின் சகோதர்
09 Jun 2026
செய்திகள்
Ind vs AFG- Rishabh Pant Batting Approach Critiqued By Ashwin Insights On
09 Jun 2026
முக்கிய செய்திகள்
1
அவசரகால சட்டத்தை நீடிக்கும் தீர்மானம் 128 மேலதிக வாக்குகளால் இன்ற
தமிழ் · 09 Jun 2026
2
உயிரிழந்தவர், கிளிநொச்சி நகரைச் சேர்ந்த 23 வயதுடைய சிவகுருநாதன் ச
3
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு
4
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels
5
ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெ
தமிழ் · 09 Jun 2026
6
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர
7
மலையக பகுதிகளில் உள்ள மீண்டும் புனரமைக்க முடியாத வீடுகளுக்கு 50 இ
தமிழ் · 09 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net