← முகப்பு செய்திகள்

IPL 2026: Vaibhav Sooryavanshi says He will come back much stronger after

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 20 பார்வைகள்
IPL 2026: Vaibhav Sooryavanshi says He will come back much stronger after

அகமதாபாத்: ஐபிஎல் 2026 சீசனில் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, பல விருதுகளைக் குவித்தார். இந்த தொடரின் சூப்பர் ஸ்டராகவும், இன்னும் சொல்ல போனால் அடையாளமாகவும் இருந்தார். கிரிக்கெட் பார்க்காத பலரும், இந்த 15 வயது சிறுவன் ஆட்டத்திற்காக டிவி முன் அமர்ந்தார்கள் என்று சொன்னால், அது மிகையாகாது. இந்த சூழலில், அடுத்த ஐபிஎல் சீசனுக்கு தன் ஆட்டத்தையும் உடல் தகுதியையும் மேம்படுத்த கவனம் செலுத்துவதாக அவர் உதெரிவித்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸை தோற்கடித்து, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஆர்சிபி பட்டத்தை வென்றது. இறுதிப்போட்டி பரிசளிக்கும் விழாவில் பெரும்பாலான விருதுகளை சூர்யவன்ஷி வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இந்த சீசனில் 776 ரன்கள், 237.30 என்ற அபார ஸ்ட்ரைக் ரேட்டுடன் அவர் அசத்தினார். சிறந்த வீரர் (MVP), வளர்ந்துவரும் வீரர் (Emerging Player), அதிக ஸ்ட்ரைக் ரேட்டுக்கான சூப்பர்ஸ்ட்ரைக்கர், ஆரஞ்சு கேப் மற்றும் அதிக சிக்ஸர்களுக்கான சூப்பர் சிக்ஸஸ் என அனைத்து முக்கிய விருதுகளையும் அவர் பெற்றார்.

IPL 2026: சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபிக்கு பரிசுத்தொகை எவ்வளவு? மற்ற அணிகளுக்கும் ஆறுதல் பரிசு

இதை தொடர்ந்து ரவி சாஸ்திரியுடனான உரையாடலில், அடுத்த ஐபிஎல் 2027 சீசனில் "இன்னும் சிறப்பாகச் செயல்பட" விரும்புவதாக சூர்யவன்ஷி தெரிவித்தார். "இது ஒரு பெருமையான தருணம், மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்த சீசனில் இதைவிட சிறப்பாகச் செய்ய முயற்சிப்பேன். என் ஆட்டத்தை உறுதியாக நம்பி விளையாடுவேன். முதல் பந்திலேயே அவுட் அடிக்க முடியும் என்று உணர்ந்தால், முழு பலத்துடன் முயற்சிப்பேன்," என்றார்.

"இந்த சீசனில், அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளிலும், நிலைக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றுவதையும் கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு போட்டியையும் ஒரே அணுகுமுறையில் விளையாட முடியாது. சூழ்நிலையைப் புரிந்து, அணிக்குத் தேவையானதைச் செய்ய வேண்டும். பிளேஆஃப் போட்டிகளிலும் இதை அதிகம் கற்றுக்கொண்டேன்," என்றும் சூர்யவன்ஷி விளக்கினார்.

பிளேஆஃப் ஆட்டங்களில், சூழ்நிலைக்கேற்ப ஆட்டத்தை மாற்றி இரண்டு முறை 90 ரன்கள் கடந்தார். தனது 15 வயதிலேயே, இந்த அசாதாரண கிரிக்கெட் பயணத்தைத் தொடர கடின உழைப்பும் மேம்பாடும் அவசியம் என்பதை அவர் உணர்ந்துள்ளார்.

IPL 2026: ஆர்சிபி கோப்பையை வென்றதற்கு காரணம்.. இடையில் எங்களுக்கு ஒரு சிக்கல் வந்தது- விராட் கோலி

"ஆம், நான் இப்போது உடல் தகுதியைப் பராமரிக்க வேண்டும். நீண்ட காலம் விளையாட விரும்புவதால், காயங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். எனது உடல் தகுதியை மேம்படுத்தி, தொடர்ந்து இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும்," என்று சூர்யவன்ஷி கூறினார். "RR அணியில் மூத்த வீரர்கள், உதவியாளர்கள் என அனைவரும் ஆதரவாக உள்ளனர். அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர்கள் என்பதால் நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது. அணியின் சூழல் மிக ஆரோக்கியமாக உள்ளது," என்றார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net